எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!

Feb 20, 2026,06:03 PM IST

கொச்சி: எனக்கு நீண்ட காலமாக வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் இருந்தது. எதனையும் என்னால் முகர முடியவில்லை. அதேபோல் உணவின் சுவையும் தெரியவில்லை என்று மலையாள நடிகர் மம்முட்டி தனது உடல் நலம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.


மலையாள திரையுலகில் டாப் நடிகராக இருந்து வருபவர் நடிகர் மம்முட்டி. 70 வயதைக் கடந்தும் என்றும் இளமையுடன் காட்சியளிக்கும் மம்முட்டி, தனது ஆரோக்கியம் மற்றும் உணவு முறை குறித்து எப்போதும் கவனமாக இருப்பவர். இவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2025ஆம் ஆண்டில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்து வருகிறார். இவரது உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் பரவி வருகிறது. இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரே தனது உடல்நலம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.




சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்முட்டி பேசுகையில், கண் பார்வையும் கேட்கும் திறனும்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை. எனக்கு நீண்ட காலமாக வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் இருந்தது. எதனையும் என்னால் முகர முடியவில்லை. அதேபோல் உணவின் சுவையும் தெரியவில்லை. இப்போதுதான் அது மெதுவாக திரும்பி வருகிறது. ஒரு விஷயத்தை நாம் இழக்கும் போதுதான் அதனுடைய மதிப்பை உணர்கிறோம் என உருக்கமாக பேசியுள்ளார்.


மம்முட்டி தற்போது இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பாட்ரியாட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், பஹத் பாசில், நயன்தாரா, ராஜீவ் மேன்ன, ரேவதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் ஏப்ரல் 23ம் தேதி திரைக்கு வருவதாக தவகல்கள் வெளியாகி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்