தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!

Oct 16, 2026,03:32 PM IST

சென்னை: தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்.


குறிப்பாக, அக்டோபர் 17ம் தேதி அதாவது நாளை 6 மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ம் தேதியும் பல மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளவை:




நீலகிரி

கோயம்புத்தூர்

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

விழுப்புரம்

ராணிப்பேட்டை


சென்னைக்கு அருகாமையில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் (மஞ்சள் அலர்ட்)


சென்னை உள்பட 25 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் விவரம்:


சென்னை, செங்கல்பட்டு, தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள்.


புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஏனைய தமிழ்நாட்டில் பல இடங்களில் மிதமான மழையுடன் கூடிய இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.


21ம் தேதியும்  பல மாவட்டங்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.


நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் கன மழை பரவலாக பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


ஏனைய தமிழகப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் மிதமான மழையுடன் கூடிய இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்