அபிஷேக் - சஞ்சு சாம்சன் அதிரிபுதிரி ஆட்டம்.. பாகிஸ்தான் உலக சாதனையை முறியடித்த இந்தியா!

Mar 08, 2026,08:49 PM IST
அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக இந்தியத் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில், தொடக்க விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பாகிஸ்தானின் சாதனையை இந்தியா இன்று முறியடித்து அசத்தியது.

இதற்கு முன் 2009-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் கம்ரான் அக்மல் மற்றும் ஷாசைப் ஹசன் ஜோடி 48 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.



இன்றைய போட்டியில் முதல் 5 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்து அந்தச் சாதனையை இந்தியா தகர்த்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 51 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவரும் சஞ்சு சாம்சனும் இணைந்து  முதல் விக்கெட்டுக்கு 94 ரன்களைச் சேர்த்து அதிரடி காட்டினர்.

இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இது 2026 டி20 உலகக் கோப்பையின் அதிவேக அரைசதமாகும். 

அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த  பிறகும் கூட தற்போது சஞ்சு சாம்சனும், இஷான் கிஷனும் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக 3வது அரை சதத்தை நோக்கி நடை போட்டு வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்