ஜெருசலேம்: இஸ்ரேல் அறிவித்துள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை ஹமாஸ் வரவேற்றுள்ளது. முதல் கட்டமாக 50 பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேலும், ஹமாஸும் பேச்சுவார்த்தை நுடத்தவுள்ளன. அதற்குப் பதிலாக 150 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் தனது சிறையிலிருந்து விடுவிக்கும்.
இஸ்ரேலும், ஹமாஸும் தொடர்ந்து மூர்க்கமாக போர் புரிந்து வந்த நிலையில் சில பல பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. அப்பாவி மக்கள், குழந்தைகள், முதியோர்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்து உலகமே கண்ணீர் வடித்து வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் விளைவாக தற்போது 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸும் இதை வரவேற்றுள்ளது.
அடுத்த கட்டமாக பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸுடன் இஸ்ரேல் பேசவுள்ளது. முதல் கட்டமாக 50 பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேசவுள்ளனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 150- பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் முன்வரும்.
அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தியது ஹமாஸ். அதில் பலர் கொல்லப்பட்டனர். பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்று விட்டனர். இதையடுத்து இஸ்ரேல் போரில்க குதித்தது. முதலில் வான் மார்க்கமாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் பின்னர் தரை வழித் தாக்குதலைத் தொடர்ந்தது. இந்தத் தாக்குதலின் எதிரொலியாக தற்போது காஸா முழுவதும் ஹமாஸின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விட்டது.
தற்போதைய போர் நிறுத்தம் காஸா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு தற்காலிக நிவாரணத்தை அளிக்கும். ஆனால் நிரந்தரப் போர் நிறுத்தமும், அமைதியும் மட்டுமே தற்போது தங்களுக்குத் தேவை என்று காஸா மக்கள் கூறுகின்றனர். இந்த போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும். அமைதி திரும்ப வேண்டும். மக்களின் அன்றாட வாழ்க்கை இயல்பாக வேண்டும். தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பது காஸாவின் கோரிக்கையாகும்.
ஆனால் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பிணைக் கைதிகளை விடுவிக்கு விடுவிக்க நாங்கள் போர் நிறுத்த நாளை நீட்டிப்போம். ஒவ்வொரு பத்து பிணைக் கைதி விடுதலைக்கும் ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு கத்தார் நாடுதான் தீவிரமாக முயற்சி எடுத்து வந்தது. அந்த நாட்டின் மத்தியஸ்தத்தின் பேரில்தான் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் ஆளும் கூட்டணியில் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவுக்கு எதிரான குரல்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன. போர்நிறுத்தம் ஹமாஸுக்கு சாதகமாக அமையும், இஸ்ரேலுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக மாறும் என்று சில கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன. குறிப்பாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதமார் பென் ஜிவிர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அனைவரையும் சமாதானப்படுத்தி அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றுள்ளார் பிரதமர் நதன்யாகு. கிட்டத்தட்ட விடிய விடிய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
{{comments.comment}}