பெங்களூரைக் கலக்கிய ஜெயிலர்.. "மஜா மாடி"..  என்ஜாய் பண்ணும் ரசிகர்கள்!

Aug 10, 2023,03:09 PM IST
பெங்களூரு: ஜெயிலர் படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் திரையிட்ட இடங்கள் எல்லாவற்றிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது. குறிப்பாக  பெங்களூரில் இதுவரை இல்லாத அளவுக்கு படம் சூப்பரான வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவராஜ் குமார் என பெரும் பெரும் தலைகள் எல்லாம் படத்தில் இடம் பெற்றிருப்பதால். நெல்சனின் ஜெயிலர் இப்போது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று விட்டது.

தமிழ்நாடு முழுவதும் படம் இன்று ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கூட ஜெயிலருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பெங்களூரு என அண்டை மாநிலங்களிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

பெங்களூரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான தியேட்டர்களில் ஜெயிலர் திரையிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முதல் நாளே வசூலில் சாதனை படைத்துள்ளது ஜெயிலர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அதிகாலை முதலே தியேட்டர்களில் திருவிழாக் கூட்டம் தொடங்கி விட்டது. பல ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு படம் பார்ப்பதற்காக அனுமதி அல்லது விடுமுறை விடப்பட்டிருந்தது. பல நிறுவனங்கள் மொத்தமாக டிக்கெட் வாங்கி ஊழியர்களுக்குக் கொடுத்து படம் பார்க்க அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலர் படத்தில் ஷிவராஜ் குமாரும் நடித்திருப்பதால் அவரது ரசிகர்களும் தியேட்டர்களில் குவிந்து விட்டனர். இதனால் படத்தின் வசூல் டபுளாகியிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்