- ஜெயபாரதி மதிவாணன்
அமாவாசை மற்றும் பெளர்ணமிக்குப் பிறகு வரும் பதினோராம் நாளான ஏகாதசி திதியில் மகாவிஷ்ணுவை நினைத்து வழிபடும் மிகச் சிறப்பு வாய்ந்த விரதமே ஏகாதசி விரதம் ஆகும். அதிகாலையில் நீராடி மகாவிஷ்ணுவைக் கும்பிட்டு விஷ்ணு மந்திரங்களைச் சொல்லி நாள் முழுவதும் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும் .
துவாதசி பாரணை ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி திதியில் சூரிய உதயத்திற்குப் பிறகு எளிய உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் .
விரதத்தின் பலன்கள்:

ஏகாதசி விரதம் இருப்பதனால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கி மனத்தூய்மையும் உடல் ஆரோக்கியமும் மேம்படும். அஸ்வமேத யாகம் செய்த பலனும் இறுதியில் வைகுண்ட பதவியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை .
அம்பரீசன் மகாராஜா, மகாவிஷ்ணுவின் தீவிர பக்தராவார். ஏகாதசி விரதத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்திய, ஏகாதசி விரத மகத்துவத்தை உணர்த்தும் அம்பரீஷ் மகாராஜாவின் கதை .
அம்பரீஷ் மகாராஜா இஸ்வாகு வம்சத்தைச் சேர்ந்த நாவாகனின் மகன் ஆவார். நாட்டைச் சிறப்பாக ஆண்டாலும் அவரது மனம் முழுமையும் நாராயணனின் திருவடிகளிலேயே இருந்தது. சிறந்த பக்திமானாகத் திகழ்ந்தார் .ஒரு வருட காலம் ஏகாதசி மற்றும் துவாதசி விரதத்தை மிகக் கவனமாகச் செய்து வந்தார் .விரதத்தின் முடிவில் துவாதசி திதியில் உரிய நேரத்தில் பாரணை விரதத்தை நிறைவு செய்து உணவு அருந்தும் நிகழ்வு செய்ய வேண்டும்.
அப்பொழுது துர்வாச முனிவர் மன்னனின் மாளிகைக்கு விருந்தினராக வந்தார். அத்திரி முனிவருக்கும், அனுசியா தேவிக்கும் மகனாக பிறந்தவர் துர்வாசர். கடும் கோபத்திற்குப் பெயர் பெற்றவர், மாபெரும் தவ வலிமை கொண்டவர். இவரின் கோபத்திற்குப் பயந்து தேவர்களும் அசுரர்களும் இவரை மிகுந்த எச்சரிக்கையுடனும் மரியாதையுடனும் நடத்துவார்கள் .
அம்பரீஷ மஹாராஜா துர்வாச முனிவரை அன்புடன் வரவேற்று உணவு உட்கொள்ளுமாறு வேண்டினார். நதியில் நீராடி விட்டு வருவதாகக் கூறி துர்வாசர் சென்றார் .துர்வாசர் நீண்ட நேரமாகத் திரும்பவில்லை. துவாதசி திதி முடிவடையும் நேரம் நெருங்கியது. குறிப்பிட்ட நேரத்திற்குள் விரதத்தை முடிக்காவிட்டால் விரத பலம் போய்விடும். முடித்தால் முனிவரை அவமதித்ததாகிவிடும். பெரியோர்களின் ஆலோசனை கேட்டு திதி தப்பக்கூடாது என்பதற்காக துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி பாரணையை நிறைவு செய்தார் அம்பரீசன்.
தாமதமாக வந்த துர்வாசர் தன் அனுமதியின்றி மன்னன் பாரணை செய்ததை ஞானத்தால் அறிந்து கடும் கோபம் கொண்டார். தன் கோபத்தால் தலையில் இருந்து ஒரு அரக்கனை உருவாக்கி அம்பரீஷனை அழிக்க ஏவினார். நாராயணனின் பக்தனைக காப்பாற்ற பகவானின் சுதர்சன சக்கரம் தானாகப் பாய்ந்து வந்து அந்த அரக்கனை அழித்ததுடன் துர்வாச முனிவரையும் துரத்தியது.
பயந்து போன துர்வாசர் தப்பி ஓடி பிரம்மனிடமும் சிவபெருமானிடமும் சென்றார். அவர்கள் தங்களால் உதவ முடியாது என்று கூறி மகாவிஷ்ணுவையே சரணடைமாறு கூறினர். விஷ்ணுவோ "நான் என் பக்தரின் கட்டுப்பாட்டில் உள்ளேன். எனவே நீ போய் அம்பரீஷ் இடமே மன்னிப்பு கேள் "என்றார். துர்வாசர் ஓடி வந்து அம்பரீசனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார். பெருந்தன்மை கொண்ட அம்பரீஷன் சுதர்சன சக்கரத்தை அமைதிப்படுத்தும் படி வேண்டிக்கொண்டு முனிவரைக் காப்பாற்றினான்.
இறைவன் தன் பக்தனைக் காப்பாற்றுவதையும், அகந்தையை விட பக்தி மேலானதையும் இக்கதை நமக்கு உணர்த்துகிறது.
(ஜெயபாரதி மதிவாணன், விருதுநகர்)
செல்வம் பெற இப்பதிகம் பாடுக!
திருவாசகம்.. பதிகம் 1 .. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் "தாள்"வாழ்க"!
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
தலையங்கம்: சிறுமிகளுக்கு எதிரான கொடூரம்.. அயோக்கியர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும்!
ஏகாதசி விரதத்தின் மகிமை அல்லது அம்பரீஷ மஹாராஜாவின் பக்தி!
கீழ்வானம் செந்நிற ஆடை அணிய.... மலர்கள் சோம்பல்முறிக்க...!
திருமலை குமாரசுவாமி திருக்கோவில்.. குன்றின் மீதமர்ந்து.. அருள் பாலிக்கும் முருகப் பெருமான்!
"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்".. கதை அல்ல நிஜம் (2வது பகுதி)
{{comments.comment}}