அதெப்படிம்மா.. உன் வீட்டுக்காரர் வேட்டி மட்டும் வெள்ளை வெளேர்னு இருக்கு??

Apr 21, 2023,12:48 PM IST
- மகா

சென்னை: காலையிலேயே வெயில் இந்த வெளு வெளுக்குதே.. பூமியிலேயே மிகப் பெரிய  சலவைக்காரர் சூரியன்தானோ.. என்ற கேள்வி வாய் வரை வந்து பிறகு மறுபடியும் உள்ளேயே போயிருச்சு.. காலையிலேயே கடியா.. முடியாதுய்யா ராசா என்று நீங்க சொல்வதும் காது வரை வந்து போகிறது.

வெள்ளிக்கிழமையும் அதுவுமா எதுக்குங்க டென்ஷன்.. எப்பவும் ஜாலியா இருங்க.. எதுக்குமே டென்ஷன் ஆகாதிங்க.. புண்பட்ட மனதாக இருந்தாலும் புன்னகையோடு இருங்க.. மத்தவங்களையும் சிரிக்க வைங்க.. அதை விட வேற என்ன பெரிசாக ஒரு மனித மனதுக்கு சந்தோஷம் கிடைத்து விடும்.



சரி வாங்க கொஞ்சம் கடிச்சுட்டு வரலாம்.. அதாவது கடிஜோக்ஸ் படிச்சுட்டு வரலாம்!

கணேஷ்:  நடக்கவே முடியாத ரோடு எது தெரியுமா?                                                             
தினேஷ்:  ம் ம் ம்......... தெரியலையே!                                      
கணேஷ்:  ஈரோடு
தினேஷ்: சரி.. பறக்குற ஊர் எது தெரியுமா..
கணேஷ்: அது என்னடா பறக்குற ஊரு
தினேஷ்: அதுவும் "ஈ"ரோடுதாண்டா!

--

ராம்:  வண்டி ஓட்ட தெரியலன்னா என்ன பண்றது?                                                                
சோம்:  வண்டி ஓட்ட கத்துக்கணும்                                                                  
ராம் : இல்ல வண்டி ஓட்டையே பெருசா போடணும்

--

ராணி : பூச்சி எல்லாம் நம்ம வீட்டுக்கு வராமல் இருக்க என்ன செய்யணும் தெரியுமா?                          
வாணி : தெரியலையே!                              
ராணி: நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்.

--

உமா:  மழைக்காலத்தில் நாம் ஏன் குடை பிடிக்கிறோம் தெரியுமா?                                                       
ரமா:  இதுல என்ன ஆச்சரியமாக  கேக்குற, மழையில் நனையாம  இருக்கத்தானே.                              
உமா:  இல்ல குடையை பிடிக்கலைன்னா அது கீழே விழுந்துரும் இல்ல.

--

மாலா:  நீ மட்டும் எப்படி உன் புருஷனோட வேஷ்டிய  வெள்ள வெளேர்னு  துவைக்கிற?                                               கலா:  அவரைதான் அடிச்சு துவைக்க முடியாது அதான்  அவர நெனச்சு வேஷ்டிய அடிச்சு துவைப்பேன்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்