Kerala Tour Diary: தூரத்தில் யானை தெரியுமா?.. கடவுளின் தேசம் அல்லவா!

Oct 02, 2026,07:01 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


ஸ்விஃப்ட் எனை ஏற்றிக் கொண்டு கிளம்பினான். செங்கோட்டை கடந்து மெல்ல மெல்ல மலை மேல் ஏறத் தொடங்கினான். மெல்லிய காற்று வா வா என்று வரவேற்பு தந்தது. கடவுளின் தேசம் அல்லவா. 


திட்டமிட்ட படி தென்மலா எக்கோடூரிசம் சென்று எம்மை தேடி ஓடி வந்த மான் கூட்டத்தை நலமா என்று விசாரித்து விட்டு புக்கிங் செய்த அறையை தேடிச்சென்று சுமைகளை இறக்கி வைத்து விட்டு மதிய உணவு ஆசைதீர ஐலமீனை சுவைத்து விட்டு மெதுவாக டேமுக்கு ஸ்விஃப்ட் அழைத்து சென்றான். 


வாசலில் அமர்ந்திருந்த காவலர் நல்ல தமிழ் பேசினார். பரிசல் பயணம் நீண்ட நாள் ஆசை. அழகான மூங்கிலால் பின்னப்பட்டு இருந்தது. கல்லடா அணையின் நீர் பச்சையாக பாசமாக இருந்தது. தூரத்தில் யானை தெரியுமா என்று நோக்கி கொண்டு வந்தேன். 


பரிசல் அழகான தாலாட்டு பாடி சென்றது. சுஜித் அழகாக இயக்கினார். நல்ல தமிழ் பேசினார். நிறைய புதிய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். ஒகேனக்கல் பரிசல் பயணம் வேகமாக இருக்கும். இது தாலாட்டு போல இருந்தது. 




இறங்கி டாடா காட்டிவிட்டு அருகில் இருந்த நபர்களிடம் கதை பேசி விட்டு நகர்வலம் வந்தேன். வாசனை மிக்க பெரிய அன்னாசி பழம் மற்றும் தேன்வாழை வாங்கி கொண்டு எனை மீண்டும் அறைக்கு கொண்டு வந்து விட்டான். 


அறையின் திரைச்சீலை நீக்கினால் கல்லடா ஆறு எனை பார்த்துகொண்டு போகிறது. சற்று மலை ஏறினால் குட்டி அருவி உண்டு. நாளை கொஞ்சம் ஜீப் சவாரி போய்விட்டு வரும் வழியில் ஆசை தீர பால் அருவியில் குளித்து விட்டு குற்றாலம் போய் நலம் விசாரித்து வீடு வந்து விட்டு விடுவான் ஸ்விஃப்ட்.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்