மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!

Oct 21, 2026,04:12 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


லெமூரியா கண்டம் பற்றி சிறிய வயதில் குறும்படம் ஒன்று பார்த்த போது மிகவும் வியப்பாக இருந்தது. கொலம்பஸ் பற்றி பாடல் வரிகள் கேட்டபோது அவரை பற்றி படித்தேன் எத்தனை நாடுகளை எவ்வாறெல்லாம் போய் கண்டுபிடித்தார் என்று வியந்தேன். 


மாணவர்கள் கூட கீழடி சென்று பார்த்த போது நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நம் கண் முன்னே காட்சிபடமாக விரிந்தது. 


நாலு மாவடி செல்லும் போதெல்லாம் ஆதிச்சநல்லூர் கண்ணில் படும். ஆதிச்சநல்லூர் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அழகான பொக்கிஷமாக நேரிடையாக சென்று பார்க்கலாம். 


இப்போது லேட்டஸ்ட்டாக பொருணை அருங்காட்சியகம் திருநெல்வேலியில் இரண்டு மலைகளை பிளந்து கொண்டு இருக்கும் அந்த இடத்தில் தமிழ் நாட்டின் விலங்கான வரையாடு மலையின் உச்சியில் கம்பீரமாக காட்சி தருகிறது. உள்ளே போய் டிக்கெட் எடுத்தவுடன் நம்மை அழைத்துச் செல்ல பேட்டரி வண்டி. ஒவ்வொரு இடமாக சுற்றி வர மாலை ஆகிவிடும். 3,டி படம் வேற லெவல். லைஃப் திருநெல்வேலி அல்வா சாப்பிடலேனா கூட பரவாயில்லை இதை மாதிரி ஒரு காட்சியை தவறவிட கூடாது மக்களே. இது நம் தமிழனின் வரலாறு. 




தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி மலை அடிவாரத்தில் 2026,ல் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. மண்ணை இஞ் இஞ் சாக தோண்ட நூறு பெண்கள் பணி செய்து வருகின்றனர். மணலை சலித்து உள்ளே ஆழமான தோண்டினால் அழகான படி வைத்துள்ள வீடு.. அந்த நேரத்தில் பயன்படுதிய பானைகள் வளையல்கள் என்று விதவிதமான நம் பூட்டன் காலத்து பெருமை பறைசாற்றுகிறது. நிச்சேப நதி கரையோரத்தில் தான் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்று தெரிகிறது. 


மன்னர் படைகள் பெரிய ஆலமரத்தின் கீழ் தங்கியதாக‌வரலாறு கூறுகிறது. நானும் இதே ஆலமரத்தடியின் கீழே எம் பள்ளி மாணவர்களை டிராக்டர்ல அழைத்து சென்று ஆண்டு விழா நடத்தியது மறக்க இயலாது. ஒரு வேளை நான் மன்னர் பரம்பரை என்று தான் தோன்றுகிறது. லிங் இல்லாமல் யாரும் எந்த இடத்தில் வாழமுடியாது பயணப்பட முடியாது என்பது உண்மை தானே. 


நாம் சாப்பிடும் ஒவ்வொரு நெல் பணியிலும் நம் பெயர் எழுதியிருப்பதாக பெரியவங்க சொல்வாங்க. என் மனக்கண்ணில் நானும் வீரவாள் சொருகி தலையில் கிரீடத்துடன் வெள்ளை குதிரையில் டக் டக் என்று மலையை சுற்றி ஓடும் காட்சி தெரிகிறது. 


வானத்தில் அடிவானம் இளஞ்சிவப்பு நிறத்தில் தெரிகிறது. மாலை சூரியன் வெட்கப்பட்டு மேகத்திற்குள் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே மறைகிறான்.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!

news

தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!

news

முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!

news

வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!

news

வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!

news

மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!

news

எது முன்னேற்றம்?

news

நம்ப குழந்தைதானே!

news

ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்