தூத்துக்குடி முத்து போல!

Oct 16, 2026,02:52 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


என் சொந்த ஊர் தூத்துக்குடி. நான் ஆரம்பப்பள்ளி தமிழ் வழி கல்வியில் படித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை ஜாலியான வாழ்க்கை. கடலோரம் சென்று மணலில் வீடு கட்டி விளையாடுவது முதல் கடலில் மிதந்து சென்று குளிப்பது வரை நன்றாக தான் போனது. 


ஆரம்பப்பள்ளி முடித்து ஆறாம் வகுப்பு வேறு பள்ளிக்கு சென்றேன். நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். ஊரெல்லாம் சுற்றி வந்தோம். மிதிவண்டியில் போகாத இடம் இல்லை. நான் எட்டு படிக்கும் போது தான் என் வாழ்வில் யாரும் எதிர்பாராத அளவு இடி விழுந்தது. 


ஆண்நண்பர்கள் பிடிக்கவில்லை. பள்ளிக்கூடம் போக பிடிக்கவில்லை. வீட்டில் அடி அடி என்று அடித்தார்கள். உறுதியாக முடியாது என்று சொல்லி விட்டு ஆடு மேய்க்க அனுப்பினார்கள். ஆண் என்று என் நிலை மாறிவிட்டது. என் மனசும் மாறியது. கொஞ்ச வருடங்கள் கழித்து ஊரை விட்டு போக முடிவு செய்தேன். 


மும்பை ரயில் ஏறி சென்றேன். திருநங்கைகள் என்றால் வேறு மாதிரி எனை பயன்படுத்தினார்கள். மிகவும் வேதனை அடைந்தேன். அங்கு சமையல் செய்யும் லட்சுமி பாட்டி உதவியால் எப்படியோ தப்பித்து ரயில் ஏறி சொந்த ஊர் வந்தேன். என் நிலை அறிந்து என் குடும்பம் என்னை ஏற்றுக் கொண்டது. இப்போது என் பெயரை மாற்றி கொண்டேன். 




அரசு இசைகல்லூரியில் சேர்ந்து நாதஸ்வரம் வாசிக்க படிக்கிறேன். மீண்டும்‌ ஒரு வசந்தகாலம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதை ஒருநாளும் மறக்க முடியாது. என்னை போல தங்கைகள் எனை மீண்டும் மும்பை அழைத்து சென்று ஒரு சிகிச்சை செய்ய உதவி செய்தார்கள். இப்போது நான் ஒரு நல்ல இசை கலைஞர்.


எனை பாராட்டும் போது வானத்தில் பறந்து செல்லும் கழுகை நினைத்து பார்க்கிறேன். என் வாழ்வியல் மாற்றம் வருத்தமாக இப்போது இல்லை. எனை போன்ற பலருக்கு நான் முன் மாதிரியாக வாழ்கிறேன் என்பது தூத்துக்குடி முத்து போல நானும் நல்ல முத்தாக வாழ்கிறேன்.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்