- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 20 26 வைகாசி மாதம் 18ம் தேதி திங்கட்கிழமையான இன்று ஜூன் முதல் நாள் பிறந்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் புதிய கல்வி ஆண்டு தொடங்கும் மாதம் இன்று பிறந்துள்ள ஜூன் மாதம் ஆகும்.
ஆங்கில ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதத்தில், கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து, புத்துணர்ச்சியையும், புதிய தொடக்கங்களையும் குறிக்கும் மாதமாகும்.
கோடை முடிந்து மழை :
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் மாதம் ஜூன் மாதம். இது விவசாயிகளுக்கு விதைப்பு பணிகளை தொடங்கும் பொற்காலமாகவும் அமைகிறது. இம்மாதம் முழுவதும் உலக அமைதி, ஆரோக்கியம் மற்றும் இயற்கை வளங்களை பேணிக்காப்பது குறித்த செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
முக்கியமான சர்வதேச தினங்கள் :

ஜூன் மாதத்தில் உலகளாவிய விழிப்புணர்வுக்காக பல முக்கிய தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன.
ஜூன் 1: திங்கட்கிழமை- சர்வதேச பெற்றோர்கள் தினம் மற்றும் உலக பால் தினம்.
ஜூன் 5 : வெள்ளிக்கிழமை -
உலக சுற்றுச்சூழல் தினம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரக்கன்றுகள் நடுவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள்.
ஜூன் 8 :திங்கட்கிழமை-
உலகப் பெருங்கடல்கள் தினம்.
ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை-
சர்வதேச யோகா தினம். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உலகளாவிய தினமாகக் கருதப்படுகிறது.
மேலும் வைகாசி மாதம் 18ம் தேதி முதல் ஆனி மாதம் 16ஆம் தேதி வரை உள்ள ஜூன் மாதத்தில் உள்ள அனைத்து விசேஷ நாட்கள் மற்றும் விரத நாட்கள் பற்றி பார்ப்போம்..
ஜூன் 1 திங்கள் :
சர்வதேச பெற்றோர்கள் தினம். உலக பால் தினம்.
ஜூன் 4 வியாழன்:
சங்கடஹர சதுர்த்தி,
சுப முகூர்த்தம்.
ஜூன் 5 வெள்ளி:
திருவோண விரதம். உலக சுற்றுச்சூழல் தினம்.
ஜூன் 6 சனி :
தேய்பிறை சஷ்டி விரதம்.
ஜூன் 7 ஞாயிறு: தேய்பிறை அஷ்டமி.
ஜூன் 8 திங்கள்: நவமி.
ஜூன் 9 செவ்வாய்: தசமி திதி, மேல் நோக்கு நாள்.
ஜூன் 11 வியாழன்: ஏகாதசி.
ஜூன் 12 வெள்ளி: பிரதோஷம்.
ஜூன் 13 சனி:
மாத சிவராத்திரி, கிருத்திகை.
ஜூன் 14 ஞாயிறு: அமாவாசை. காலை 11:50 முதல் திங்கள் காலை 9:27 வரை.
ஜூன் 15 திங்கள்:
ஆனி மாதம் முதல் தேதி.
ஜூன் 16 செவ்வாய்: சந்திர தரிசனம் .
ஜூன் 17 புதன்: சுப முகூர்த்தம்.
ஜூன் 18 வியாழன்: சதுர்த்தி விரதம், சுப முகூர்த்தம்.
ஜூன் 20 சனி: சஷ்டி விரதம் ( வளர்பிறை).
ஜூன் 22 திங்கள்: ஆனி உத்திரம்.
ஜூன் 24, 25 புதன், வியாழன்: சுப முகூர்த்தம்.
ஜூன் 26 வெள்ளி: மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை.
ஜூன் 27 சனி: சனி பிரதோஷம்.
ஜூன் 29 திங்கள்: பௌர்ணமி இன்று முழுவதும் நாளை காலை 06: 11 வரை.
பெற்றோர்களும், பள்ளிக் குழந்தைகளும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிச் செல்ல தயாராகும் நிலையில் இந்த மாதம் முழுவதும் அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று வாழ்வோமாக.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலக்ஷ்மி பாலசுப்ரமணி.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}