கடலுக்குப் பக்கத்துல இருந்தா சீனியர்.. !

Jul 19, 2023,11:37 AM IST
என்ன பாஸ்.. ரொம்ப போரடிக்குதா.. கடுப்பா இருக்குதா.. வெறுப்பா இருக்கா.. அட வாங்க பாஸ். ஜாலியா நாலு ஜோக் படிச்சுட்டுப் போங்க.. கூல் ஆயிருவீங்க!

சீனியர்.. ஜூனியர்..!

ஆசிரியர் : சீனியருக்கும் ஜூனியருக்கும் என்ன வித்தியாசம் சொல்லு.
மாணவன் : ரொம்ப சிம்பிள் சார்.
ஆசிரியர் : சிம்பிளா? அது எப்படி? சரி பதிலை சொல்லு.
மாணவன் : சார்.. கடல் பக்கத்துல அதாவது "சீ நியரா" (பக்கத்துல) இருந்தா சீனியர். அதுவே மிருகக்காட்சி சாலை  "ஜூ நியரா" இருந்தா ஜூனியர்!
ஆசிரியர் :???!!!




என் செருப்பையே போட்டுட்டு திரும்பினேன்

அவன்: டேய் சூப்பர் செருப்புடா.. எப்படியும் 1000 ரூபாய் இருக்கும்
இவன்: அப்படியா அப்புறம் என்னாச்சு
அவன்: கோவிலுக்கு உள்ள போறப்ப இருந்துச்சு.. 
இவன்: அப்பறம்
அவன்: திரும்பி வந்து பார்த்தா காணோம்.. சரி போய்த் தொலையுதுன்னு என் செருப்பையே போட்டுட்டு கிளம்பி வந்துட்டேன்!
இவன்: ???!

நான் வந்தா ஏன் கண்ணாடி போடறீங்க

மனைவி: ஆமா, என்னைப் பார்த்ததும் ஏன் உடனே கண்ணாடியை எடுத்து மாட்டறீங்க
கணவன்: டாக்டர்தான் சொன்னார்
மனைவி: என்ன சொன்னார்
கணவன்: தலைவலி வந்தா கண்ணாடி போடணும்னு!
மனைவி: ???!!!

என்ன பண்ணிட்டிருந்தீங்க

பேஷன்ட்:  எனக்கு 3 நாளா இறுமல் டாக்டர்.. நிக்கவே இல்லை
டாக்டர்: அப்படியா.. ஏன் உடனே வரலை.. என்ன பண்ணிட்டிருந்தீங்க
பேஷன்ட்: இறுமிட்டிருந்தேன் டாக்டர்!

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்