காட்டுக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி கோவில் பிரம்மோற்சம்!

Oct 15, 2026,04:27 PM IST

- பத்மாவதி, வட சென்னிமலை


தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் வடசென்னிமலை என்ற கூறக்கூடிய காட்டுக்கோட்டை ஊராட்சியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி என்ற கோவிலில் பிரம்மோற்சவம் வருகின்ற புரட்டாசி மாதம் 30 ஆம் நாள் அக்டோபர் 17ஆம் நாள் நடைபெற உள்ளது.


இதனை ஒட்டி 9.10.26 அன்று ஸ்ரீ வரதராஜ பெருமாளின் கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கப்பட்டது. இதனை ஒட்டி 10.10.26 அன்று காட்டு சன்னியாசி பெருமாள் கோவிலிலும் ஸ்ரீ வரதராஜ ஸ்ரீதேவி பூதேவி ஆலயத்திலும் திருக்கொடி ஏற்றப்பட்டது.




11.10.26 அன்று ஊர் பொது மக்கள் சார்பில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 12 10 26 அன்று முதல் நாள் திருவிழாவாக நாயுடு சமூகத்தினரின் பூஜைகள் நடைபெற்று பொதுமக்கள் அனைவரும் மாவிளக்கு தட்டுடன் கோவிலுக்கு வந்து விழாவை சிறப்பித்தனர். இதனை ஒட்டி நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 10 மணி அளவில் சுவாமி புறப்பாடு கருட வாகனத்தில் மான வேடிக்கையுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


இதனை ஒட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினரும் திருவிழா எடுத்து செய்து திருவிழாவை கொண்டாட உள்ளனர். மேலும் இந்த வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆலயம் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ளது. மேலும் இந்த பிரம்மோற்சவம் என்பது கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைபெற்று இருக்கலாம் என்று அறியப்படுகிறது.




85 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் கூட இந்த பிரம்மோற்சவம் எனக்குத் தெரிந்து நடைபெறவில்லை என்று கூறுகின்றனர். அதனால் இந்த பிரம்மோற்சவம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மக்கள் நீண்ட நாளுக்கு பிறகு நடைபெறும் பிரம்மோற்சவம் என்பதால் மிகுந்த பக்தியுடனும் பிரம்மோற்சவத்தை எதிர்கொண்டு காத்துக்கொண்டிருக்கின்றனர்


இன்று 15.10.26 வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத தெய்வங்களின் ஆசியை பெற்றனர். திருமணத்திற்கு பிறகு அறுசுவை உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்