உழைப்பால் முன்னேற்றத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே...
சில பிரச்சனைகளுக்கு சுயசிந்தனையோடு முடிவெடுக்கும் ஆற்றல் மேம்படும். வருவாய் வாய்ப்புகளை மேம்படுத்தி கொள்வீர்கள். உயர்ரக ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உடல் பலத்தை காட்டிலும் மனோபலம் அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும். இடையில் விட்ட சில பணிகளை முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நேர்முக மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் விலகும். உணவு விஷயத்தில் விழிப்புணர்வு வேண்டும். புதிய முயற்சிகளில் தடைகளைச் சந்தித்தாலும் இலக்குகளை அடைந்து விடுவீர்கள். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாகன பயணத்தில் சற்று கவனம் வேண்டும். வெளிநாடு பயணத்தில் இருந்த தடைகள் குறையும். குழந்தைகள் பற்றிய கவலைகள் மனதில் ஏற்படும். குழந்தைகளை வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைப்பது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:

புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் கௌரவ பொறுப்புகளும் கிடைக்கும். வேலை நிமிர்த்தமான கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும். கடினமான சூழல்களையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் சில மாற்றமான வாய்ப்புகளும் சுழலும் அமையும்.
தொழில் துறையினருக்கு:
போட்டி, பொறாமைகள் படிப்படியாக குறையும். வீண் பிரச்சனைகளில் சிக்கியவர்கள் அதிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகளில் கவனம் வேண்டும். விவசாயிகளுக்கு மகசூலில் ஓரளவு லாபம் கிடைக்கும். மாற்றுப் பயிர் விளைச்சலில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். அரசு வழியில் இருந்த பிரச்சனைகளை நிதானமாக கையாண்டு வெற்றி கொள்ளவும்.
அரசியல்வாதிகளுக்கு:
அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டத்தில் மதிப்பு மரியாதை உயரும். முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்கள் உங்கள் பேச்சுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவார்கள்.
கலைஞர்களுக்கு:
புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். சக கலைஞர்களும் புதிய வாய்ப்புகளைத் தேடித்தருவார்கள். ரசிகர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். தொழில்நுட்ப ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு, விவகாரம் சாதகமாக இருக்கும். அரசு வழியில் பாராட்டும் மதிப்பும் உயரும்.
பெண்களுக்கு:
சகோதர வழியில் அலைச்சல்கள் ஏற்படும். கணவர் வழி உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். வேலைக்கு செல்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். இன்ப சுற்றுலாக்கள் சென்று வருவீர்கள். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். விளையாட்டு போட்டிகளில் தனிப்பட்ட ஈடுபாடுகள் உண்டாகும்.
மாணவர்களுக்கு:
முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கப் பெறுவீர்கள். ஆசிரியர் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். உயர்கல்வியில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளிவிளையாட்டுகளில் ஈடுபாடும் புதிய அனுபவமும் கிடைக்கும். விரும்பிய பாடப் பிரிவுகளிலும் சேர்வீர்கள்.
வழிபாடு:
சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட செயல்களில் இருக்கும் தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}