தமிழ் குரோதி வருட ராசிபலன் 2024: விவேகத்துடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே!

Apr 10, 2024,04:45 PM IST

பேச்சுக்களில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். பூர்வீக விஷயங்களால் ஆதாயம் அடைவீர்கள். தர்ம காரியங்கள் மற்றும் திருப்பணி சார்ந்த செயல்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் விலகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சமூகப் பணிகளில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். 


வியாபாரத்தில் புதிய விஷயங்களையும், நுட்பங்களையும் கற்றுக் கொள்வீர்கள். கடன் சார்ந்த சில உதவிகளில் அலைச்சல்கள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தெளிவான சிந்தனைகளின் மூலம் புதிய லட்சியங்களை உருவாக்குவீர்கள். மனதளவில் எதையும் சமாளிக்கும் மனப் பக்குவமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். 


உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படவும். போட்டி, பந்தயம் சார்ந்த விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்த விதத்தில் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். திட்டமிட்ட சில காரியங்களை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள்.



வியாபாரிகளுக்கு:


ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். பயணம் சார்ந்த விஷயங்களால் ஆதாயம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் சூழ்நிலைகள் அறிந்து முடிவெடுக்கவும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். ஒப்பந்தங்களை படித்துப் பார்த்து கையெழுத்து இடுவது நல்லது. இழுபறியான சில பணிகளை நுட்பமாக திட்டமிட்டு முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபார ரீதியான பயணங்களால் லாபம் மேம்படும். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள்.


உத்தியோகஸ்தர்களுக்கு:


துரிதத்துடன் செயல்படுவது உங்கள் மீதான நன்மதிப்பை உண்டாக்கும். மேல் அதிகாரிகளிடத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தன வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பணிகளில் விருப்பமான இடம் மாற்றம் கிடைக்கும். அலுவலகம் சார்ந்த பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். முதலீடு மற்றும் சேமிப்பு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.


கலைஞர்களுக்கு:


உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களின் ரசனைத் தன்மைகளை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சில நுட்பங்களும், மாறுபட்ட அனுபவங்களும் ஏற்படும். அரசு சார்ந்த அங்கீகாரங்கள் தாமதமாக கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் காரிய அணுகூலம் உண்டாகும். புதிய படைப்புகளை உருவாக்குவதில் சற்று ரகசியம் காப்பது நல்லது. பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் ஏற்படும்.


அரசியல்வாதிகளுக்கு:


எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அணுகுமுறையினால் வெற்றி அடைவீர்கள். சுயநலம் கலந்த பொதுநல செயல்களால் ஆதாயம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களை சாதகமான முடிவு கிடைக்கும். தொண்டர்களின் விருப்பங்களை புரிந்து கொள்வீர்கள்.


பெண்களுக்கு:


விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். புதிய மனை சார்ந்த வாய்ப்புகள் அமையும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். உறவுகளின் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.


மாணவர்களுக்கு:


பாடங்களில் இருந்துவந்த கவனக்குறைவுகள் குறையும். எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் உத்வேகத்தை ஏற்படுத்தும். உயர்நிலைக் கல்வியில் ஆலோசனை பெற்று முடிவு செய்யவும். நண்பர்களின் மறைமுக ஆதரவு கிடைக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். அரசு உதவிகள் குறித்த வழிகாட்டுதல் கிடைக்கும். புதிய துறை சார்ந்த கல்வியும், அது சார்ந்த தேடல்களும் அதிகரிக்கும்.


வழிபாடு:


தினந்தோறும் விநாயகரை வழிபடுவதன் மூலம் தடைகள் விலகும். மனதளவில் புத்துணர்ச்சிகள் ஏற்படும்.

சமீபத்திய செய்திகள்

news

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்

news

நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!

news

தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!

news

ஆசிரியர்!

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்