- கா.சா.ஷர்மிளா
திருவருட்பிரகாச வள்ளலார் என்றும் வடலூர் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் அக்டோபர் 5, 1823 ராமையா பிள்ளை, சின்னம்மையாருக்கும் ஐந்தாவது மகனாக பிறந்தார் ,
சிறுவயதிலேயே தந்தையை இழநதார், தன் ஒன்பதாவது வயதில் முருகப்பெருமான் மீது தெய்வ மணிமாலை என்ற பாடலை பாடினார், தன் இளம் பருவத்திலிருந்து ஜாதி மத இன வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்தார்.
இவர் 19-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த ஆன்மிக ஞானி, கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்த இவரது பிறந்தநாள், தமிழக அரசால் தனிப்பெருங்கருணை நாள் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவருடைய முக்கியக் கொள்கைகளும் ,பங்களிப்பும், ஜீவகாருண்யம்: "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வரிகளுக்கு ஏற்ப, மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களிடத்தும் இரக்கமும் அன்பும் செலுத்த வேண்டும் என்பதை வாழ்வின் அடிப்படை நெறியாகக் கற்பித்தார்.
அணையா அடுப்பு (சத்திய தரும சாலை): ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க 1867-ஆம் ஆண்டு வடலூரில் 'சத்திய தரும சாலை'யைத் தொடங்கினார்.
அவர் ஏற்றி வைத்த அந்த அடுப்பு, 150 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை அணையாமல் தொடர்ந்து பசித்தவர்களுக்கு உணவளித்து வருகிறது.
சமரச சுத்த சன்மார்க்கம்: சாதி, மதம், இனம் கடந்து மக்கள் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்' கண்டார்.
ஜோதி வழிபாடு: வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவி, உருவ வழிபாட்டிற்கு மாற்றாக இறைவனை பேரொளியாகக் கருதும் ஒளியாக வணங்க வேண்டும் என்று கருதினார்,
இவர் ஜனவரி 30 1874 வடலூரில் உள்ள மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வலகத்தில் ஜோதி வடிவமாக இறைவனுடன் கலந்தார் ,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி .. தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
(கா.சா.ஷர்மிளா, ஆசிரியர், புவனகிரி, கடலூர் மாவட்டம். வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம்- புதுவை, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்)
சொல்லாத சந்தோஷம் சொல்லாமல் அள்ளுது.. பள்ளிக்கூடம் வந்தாலே சந்தோஷம் பொங்குது!
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
{{comments.comment}}