- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 2026 தூங்கா நகரம் மதுரை மாநகர் சித்திரை பெருவிழா கொடியேற்றம் நேற்று ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சித்திரை ஆறாம் நாள் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று (ஏப்ரல் 19 ) காலை10:35 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் தங்கக் கொடி மரத்தில் மிதுன லக்னத்தில் வெகு விமர்சையாக கொடியேற்ற விழா நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் முழு அட்டவணையை இங்கு காண்போம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருடத்தில் அனைத்து மாதங்களிலும் திருவிழா நடத்தப்பட்டாலும் சித்திரை மாதத்தில் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி மே மாதம் 05ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சித்திரை திருவிழா அட்டவணை 2026:

ஏப்ரல் 20: பூத வாகனம், அன்ன வாகனம்.
ஏப்ரல் 21 :கைலாச பர்வதம் &காமதேனு வாகனம்.
ஏப்ரல் 22 :தங்க பல்லக்கு உலா.
ஏப்ரல் 23 :தங்க குதிரை வாகனம், வேடர் பாரி லீலை.
ஏப்ரல் 24 :தங்க ரிஷபம்& வெள்ளி ரிஷப வாகன உலா.
ஏப்ரல் 25: நந்திகேஸ்வரர்& யாளிவாகனம்.
ஏப்ரல் 26: மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் (இரவு 7 :00மணி முதல் 7: 29 மணிக்குள் ). வெள்ளி சிம்மாசன உலா.
ஏப்ரல் 27: மீனாட்சி திக் விஜயம். இந்திர விமான உலா.
ஏப்ரல் 28 :மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். யானை வாகனம்,புஷ்ப பல்லக்கு.
ஏப்ரல் 29: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத் தேரோட்டம் (மாசி வீதிகளில்). கள்ளழகர் தங்க பல்லக்கு மதுரை புறப்பாடு.
ஏப்ரல் 30 :கள்ளழகர் எதிர்சேவை.
மே 1 : வைகை ஆற்றல் கள்ளழகர் எழுந்தருளல். (தங்க குதிரை வாகனம் )
மே 2 : தசாவதாரம் திருக்கோலம்.
மே 3: மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூ பல்லக்கு.
மே 4: கள்ளழகர் திருமாலிருஞ்சோலை (அழகர் கோவில்) புறப்பாடு.
மே 5 : கள்ளழகர் இருப்பிடம் (அழகர் கோவில் ) வந்து சேருதல்.
கட்டண சீட்டு முன்பதிவு :
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கான கட்டண சீட்டு முன்பதிவு ஆன்லைன் மூலமாகவும், ஆஃப்லைன் மூலமாகவும் ரூ200 ,ரூ500 கட்டண சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளத்தில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இரவு 9:00 மணி வரை கட்டண சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.
எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}