நான் (I Am) என்னும் மகா தியானம்

Feb 19, 2026,03:22 PM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


நான்..நான்..நான்  அல்லது I Am என்பதை மந்திரமாக சொல்லிக் கொண்டு வந்தால் நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்..


இதை உணர்ந்து விழிப்பாக சொல்லி வர வேண்டும்.. சும்மா ஏதோ நினைத்துக் கொண்டு.. பெயருக்கு வாய் மட்டும் முணுமுணுத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை.. எந்த வார்த்தை உச்சரிப்பும் விழிப்புணர்வு இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லப்பட்டால் நாம் தூங்கி விடுவோம்..


குழந்தையாக தாய் வயிற்றினில் இருக்கும்போது குழந்தை டிக் டாக் என்கிற தாயின் இதயத்துடிப்பை கேட்டு தூக்கம் கொள்கிறது.. எதையும் திரும்பத் திரும்ப சொல்வதால் அது நம்ம தூக்க நிலையில் ஆழ்த்தும்.. அழுது கொண்டிருக்கும் குழந்தை தாயிடம் சென்றவுடன் தாய் தனது மார்புக்கு அருகில் குழந்தையை அணைத்தவுடன் தாயின் மார்பு துடிப்பு கேட்டு உறக்கம் கொள்கிறது.. நான் நான் இன்று உன் இருப்பை உணர்ந்து சொல்ல வேண்டும்..




குருஜ்ஷெஃப் ஒரு ரஷ்ய ஞானி.. அவரிடம் காஷ்முஷ் சீடனாக இருந்தார்.. அவருக்கு I Am என்ற தியானத்தை குருஜ்ஷெஃப் சொல்லிக் கொடுத்து மூன்று மாதங்கள் செய்யச் சொன்னார்.. 

காஷ்முஷ் மூன்று மாதங்களாக அவரது வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு  இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தார்..


மூன்று மாதங்களுக்கு பிறகு குருஜ்ஷெஃப் அவரை மாஸ்கோவின் கடைவீதிகளுக்கு கூட்டு சென்றார்.. காஷ்முஷ் எல்லாவற்றையும் ஆச்சரியமாக பார்த்தார்.. எல்லா மனிதர்களும் தூக்கத்திலேயே நடந்து கொண்டிருந்தனர் சிலர் விற்றுக் கொண்டிருந்தனர் சிலர் வாங்கிக் கொண்டிருந்தனர் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்..  குருஜ்ஷெஃப் மட்டும் விழித்திருக்கிறார் என்பதையும் கண்டார்.. 


எல்லாமே தூங்கிக் கொண்டே செய்து கொண்டிருக்கிறார்களே என்று குருவிடம் கேட்டார்..


குரு சொன்னார்.. இவ்வளவு காலம் இவர்களில் ஒருவனாக நீ இருந்தாய்.. இப்போது சிறிது உள் விழிப்புணர்வு உன்னிடம் வந்திருப்பதால் அவர்களின் தூக்க நிலையை உன்னால் பார்க்க முடிகிறது..


யோசனைகள் (Thoughts) எண்ண அலைகள் நம்மை இந்த தூக்க நிலையில் Dream State ல் வைத்திருக்கின்றன.. எந்த யோசனை வந்தாலும்..I Am என்று உள்நோக்கி திரும்பினால்.. நாமும் விழிக்க ஆரம்பிப்போம்.. 


நாம் தொடர்வோம்…


மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர், பாடகி என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2016லேயே நடந்திருக்க வேண்டியது.. தாமதமாக திமுக கூட்டணிக்கு வந்துள்ளோம்.. பிரேமலதா விஜயகாந்த்

news

திமுக-தேமுதிக கூட்டணி.. கேப்டனின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக எக்ஸ் தள பதிவு!

news

தேமுதிகவின் புதிய பயணம்... இப்ப எந்த நிலையில் இருக்கிறது தேமுதிகவின் வாக்கு வங்கி?

news

இனி ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

news

தமிழகத்தில் தேனி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

news

காதல் படுத்தும் பாடு!

news

ஒரு மல்லிகை பூக்காரியின் அனுபவம்!

news

சிலிர்க்க வைக்கும் தமிழ்நாட்டு நாட்டுப்புறப் பாரம்பரியம்.. Dancing Through History: Tamil Nadu’s Fol

news

தன்னந்தனியாய் போராட்டம்.. கலையின் பல்பொருள் ஹைக்கூ கவிதைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்