- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி
வெண்தாமரை மலரில் வீற்றிருக்கும் அழகிய கலைமகளே !
வீணையின் நாதம் மீட்டி
அறிவினும் ஒளியை அகமெல்லாம் ஏற்றி
அறியாமை இருளை
அகற்றிடும் அன்னையே !
எண்ணத்தில் தெளிவும் எழுத்தினில் இனிமையும்
சொல்லில் நயமும் செயலில் சிறப்பும் தருபவளே !

கல்வியை பிஞ்சு கரங்களில் எழுத்தறிவாக அருள்பவளே !
தீமைகள் விலகிட நன்மைகள் பெருகிட
நம்பிக்கை மலர்ந்திட
எண்ணங்கள் சிறந்திட
தொட்டவைத் துலங்கிட
வெற்றியின் திருநாளாம் !
விஜயதசமி நன்னாளில்
அன்னையின் அருளால் அறிவும் ஆற்றலும் பெருகட்டும் !
கலைமகளின் கருணையால் கனவுகள் யாவும் வெற்றிகளாக மலரட்டும் !
கவிநய புலனத்தில் கவி மழை
பொழியட்டும் !
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
வெற்றிகள் மலரும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
சமையல் With ஸ்வர்ணா - மழைக்காலத்திற்கான ஸ்பெஷல் மணத்தக்காளி காய் & பூண்டு குழம்பு!
அன்னை சரஸ்வதி.. இல்லம் இனிமையாயிற்று! !
அறிவு கொழுக்க அகல் கொளுத்துவோம் - ஆயுதம் செய்ய அறிவை வழுத்துவோம்!
கலைமகளின் திருநாள்!
பெண் என்பவர் யார்?
என்று மாறும்
சிரிப்புக்குப் பின்னால் சில கண்ணீர் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (4)
ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் !
பொய்!
{{comments.comment}}