- ஈரோடு மாலதி
பூக்கள் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாகும். உலக அளவில் பல ஆயிரம் வகையான பூக்கள் உள்ளன. குறிப்பாக ரோஜா, மல்லிகை, தாமரை, செம்பருத்தி, சாமந்தி, தாழம்பூ, அரளி, நந்தியாவட்டை, பிச்சிப்பூ போன்ற பல முக்கியப் பூக்களின் வகைகள், அவற்றின் ஆன்மீக மகிமை மற்றும் மருத்துவப் பயன்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1. மல்லிகை - தெய்வீக வழிபாட்டிற்கும், பெண்களின் கூந்தலை அலங்கரிக்கவும் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் மலர். இதன் நறுமணம் மனதை அமைதிப்படுத்தும்.
மல்லிகைப் பூக்களை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் கண் எரிச்சல் குறையும். தாய்ப்பால் சுரப்பு அதிகமாக உதவும். மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
2. செம்பருத்தி - பல நிறங்களில் கிடைக்கும் இந்த மலர் தேவி வழிபாட்டிற்கு உகந்தது.
முடி வளர்ச்சிக்குச் சிறந்த டானிக். இதய ஆரோக்கியத்தைப் பேணவும், உடல் சூட்டைத் தணிக்கவும் உதவுகிறது. செம்பருத்தி இலை மற்றும் பூவை வைத்து காய்ச்சிய எண்ணெய் முடி உதிர்வைத் தடுக்கும்.
3. தாமரை - லட்சுமி தேவி அமரும் மலராகவும், தூய்மை மற்றும் ஞானத்தின் அடையாளமாகவும் போற்றப்படுகிறது.
தாமரை இலைகள் உடல் எடையைக் குறைக்க உதவும். இதன் இதழ்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதயத்திற்குப் பலம் சேர்க்கவும் பயன்படுகின்றன.
4. ரோஜா - அன்பின் வெளிப்பாடாகவும், வழிபாடுகளில் இறைவனுக்குச் சூட்டப்படும் முதன்மை மலராகவும் திகழ்கிறது.
ரோஜாப் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்த் வயிற்றுப் புண், உடல் உஷ்ணம் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளைக் குணப்படுத்தும். ரோஜா நீர் கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

5. சாமந்தி
பண்டிகைக் காலங்களிலும், வீட்டு வாசல்களில் தோரணமாகவும், பூஜைக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் இதழ்கள் காயம் மற்றும் தோல் தொற்றுகளைக் குணப்படுத்த உதவும் ஆன்டி-செப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளன.
பூக்களின் உலகம் மிகப்பெரியது. தாவரவியலாளர் வகைப்பாட்டின்படி உலகில் 3 லட்சத்திற்கும் அதிகமான பூக்கும் தாவர இனங்கள் உள்ளன. அலங்காரப் பூக்கள் வகையில் டாலியா, ஆர்ச்சிட், கிளாடியோலஸ், கார்னேஷன் ஆகியவை அடங்கும்.
பழம் தரும்பூக்கள் வகையில் மாம்பூ, கொய்யாப்பூ, ஆப்பிள் பூக்கள், ஆரஞ்சு பூக்கள் ஆகியவை வரும்.
மருத்துவ மற்றும் மூலிகைப் பூக்களாக துளசி மலர், ஆவாரம்பூ, கீழாநெல்லிப் பூ, வல்லாரைப் பூ ஆகியவை உள்ளன.
(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)
Short Story: சிவகங்கை சீமைக்காரி!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
தூரத்து நிலவே... ஒளியைத் துப்பியது... இரவு!
ராமாசாரி வாரிசு!
பூவ பூவ பூவே.. மனதை அமைதியாக்கும்.. மன அழுத்தத்தை மட்டுப்படுத்தும் பூக்கள்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
கூரைவீடு !
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
{{comments.comment}}