Poem by Malliga Selvaraj: வழி பிறந்தது.. ஒரு வாசல் மூடப்பட்டு இருள் சூழ்ந்தாலும்!

Sep 24, 2026,05:30 PM IST

- கவிஞர் மல்லிகா செல்வராஜ்


உன்னால் முடியும் .. முடியும் பெண்ணே!!

பெண்ணே!!

எனக்குள் இருக்கும் 

என்னை நம்பி!!


வந்தேன்! வந்தேன்!

நானே மீண்டு வந்தேன்!!

தன் கையே தனக்கு உதவி!!

தன்னம்பிக்கை ஒன்றே என்றும் உறுதி!!


சோதனைகள், வேதனைகள் என்னை

சிற்பமாக செதுக்க வந்த உளிகளே!!


செதுக்கப்படும் போது 

வலிகள் இருந்தாலும் 

அந்த அனுபவ மொழிகளால்!


வழி பிறந்தது!!

ஒரு வாசல் மூடப்பட்டு 

இருள் சூழ்ந்தாலும்!




உழைப்பு கொடுத்த 

உத்வேகம் கொடுத்த உதவியினால்!

மறுகதவு திறக்கப்பட்டு ஒளி

வந்தது!!


நடந்ததை எண்ணி 

மயங்காமல்!

காலம் மாற்றும் என்று 

தயங்கிடாமல்!!


நம் வாழ்க்கை 

நம் கையில்!!

உழைக்கும் காசு

நம் பையில்!!

என எண்ணத்தில் 

உறுதி சேர்த்திட்டால்!


வாழ்க்கை வண்ண 

மயமே!!


(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் போன கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர், மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்து சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்!)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு

news

ஜெம் வீரமணி மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு தகவல்

news

ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது

news

இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்

news

மெந்திய மசியலும் வாழைக்காய் கொழுக்கட்டையும்!

news

House Husband-களும் இருக்க முடியும்! குடும்ப அமைப்பைப் பாதுகாக்க மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

news

நம்மை உடைப்பவர்கள் நம்மை செதுக்கியவர்களே..!

news

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை

news

தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்