பின்னணிப் பாடகியுடன் தொடர்பா?.. வாழு வாழ விடு.. நடிகர் ஜெயம் ரவி அளித்த நச் விளக்கம்!

Sep 21, 2024,06:10 PM IST

சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்ததற்கு பாடகி கெனிஷா உடனான தொடர்பு தான் காரணம் என சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு இன்று ஜெயம் ரவி விளக்கம் அளித்துள்ளார்.


தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக சமீபத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து குடும்ப நல கோர்டிலும் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஆர்த்தியோ, இது தன்னுடைய கணவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு. அவருடன் பேச கூட முடியவில்லை. எனது குழந்தைகளுடன் நான் குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறேன் என பதிலளித்திருந்தார். இதனால் இவர்களின் விவாகரத்து விவகாரத்தில் எடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர்.




இதற்கிடையில் பாடகி கெஜீஷாவுடன் ஜெயம் ரவி நெருங்கி பழகி வருவதாகவும், அதனால் தான் தனது மனைவியை பிரிய அவர் முடிவு செய்ததாகவும் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவியது. பாடகி கெனீஷாவுடன் ஜெயம் ரவி இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு, வைரலாகி வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் நிகழ்ச்சி  ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஜெயம் ரவியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி,  என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள். என்னையும் கெனீஷாவையும் தவறாக பேச வேண்டாம். அவர் ஒரு ஹீலர். வருங்காத்தில் நானும் கெனீஷாவும் இணைந்து ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். ஒன்றே ஒன்று தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், வாழு...வாழ விடு என பதிலளித்து விட்டு, வேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார் ஜெயம் ரவி. இதனால் பாடகி உடனான அவர்கள் உறவு குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.


அதே சமயம், வாழு...வாழ விடு என்ற ஸ்டேட்மென்ட் யாருக்காக ஜெயம் ரவி சொன்னார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களுக்காக அவர் சொல்லிய அட்வைசா அல்லது தன்னுடைய மனைவி ஆர்த்திக்கு அவர் கூறிய ஸ்டேட்மென்ட்டா என சோஷியல் மீடியாவில் பலரும் கேள்விகளை பகிர்ந்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்