- எம் கே திருப்பதி, திருப்பூர்
கற்போர்க்கு
நூல் ஆயுதம்
விற்போர்க்கு
பொருள் ஆயுதம்!
கவிக்கு
பொய் ஆயுதம்
செவிக்கு
ஒலி ஆயுதம்!
வாய்க்கு
சொல் ஆயுதம்
தாய்க்கு
அன்பு ஆயுதம்!
நோய்க்கு
மருந்து ஆயுதம்
வேய்க்கு
காற்று ஆயுதம்!
மாணவர்க்கு
கல்வி ஆயுதம்
மங்கையர்க்கு
கற்பு ஆயுதம்!

ஆசிரியருக்கு
அறிவு ஆயுதம்
ஆன்மீகத்துக்கு
பக்தி ஆயுதம்!
மொழிக்கு
இலக்கணம் ஆயுதம்
விழிக்கு
பார்வை ஆயுதம்!
தொழிலுக்கு
கருவி ஆயுதம்
இசைக்கு
சுருதி ஆயுதம்!
அறிவியலுக்கு
ஆக்கம் ஆயுதம்
புரிதலுக்கு
ஊக்கம் ஆயுதம்!
போருக்கு
ஆயுதமே ஆயுதம்
வெற்றிக்கு
விவேகமே ஆயுதம்!
வேருக்கு
நீர்தான் ஆயுதம்
நீருக்கு
நிலம்தான் ஆயுதம்!
வாழ்வுக்கு
அறமே ஆயுதம்
இல்லறத்துக்கு
இணக்கமே ஆயுதம்!
பெற்றோர்க்கு
பிள்ளைகளே ஆயுதம்
பிள்ளைகளுக்கு
பெற்றோரே ஆயுதம்!
ஆயுதம்
தமிழிலும் இருக்கும்
தம் மூளையாக
தலையிலும் இருக்கும்!
ஆயுத பூஜையை
ஆயுதத்தோடு இணைத்து
அறிவுக்கு கொஞ்சம்
படைத்து வைப்போம்!
அறிவு கொழுக்க
அகல் கொளுத்துவோம்!
ஆயுதம் செய்ய
அறிவை வழுத்துவோம்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)
செங்கோல் - இந்திய ஜனநாயகத்தின் உச்சியில் மிளிரும் வரலாறு
சமையல் With ஸ்வர்ணா - மழைக்காலத்திற்கான ஸ்பெஷல் மணத்தக்காளி காய் & பூண்டு குழம்பு!
அன்னை சரஸ்வதி.. இல்லம் இனிமையாயிற்று! !
அறிவு கொழுக்க அகல் கொளுத்துவோம் - ஆயுதம் செய்ய அறிவை வழுத்துவோம்!
கலைமகளின் திருநாள்!
பெண் என்பவர் யார்?
என்று மாறும்
சிரிப்புக்குப் பின்னால் சில கண்ணீர் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (4)
ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் !
{{comments.comment}}