- எம்.கே.திருப்பதி
ராஜஸ்தான் பாலைவனத்திலிருந்து
புறப்பட்ட தமிழ் நீர்!
உதவாது என ஒதுக்கிய
உதவி இயக்குநர்களின்
உமிழ் நீர்!
தொன்னூறுகளின் தொடக்கம்
ஏகப்பட்ட
எண் நூறுகளின் அடக்கம்!
அதாவது
பாதிக்குப் பாதி படங்கள்
நாட்கள்
நூறுக்கு மேல் தாண்டும்!
படக் கொட்டகைகள்
பரபரக்கும் யாண்டும்!

அதில் அன்னாரின் பங்கு
அளவிட ஒன்னாது!
எழுச்சியும் ஏற்றமும் இன்றி
ஏந்தல் இதயம்
எதுவும் எண்ணாது!
இசை முதல்
இயக்குனர் வரை
இப்படி
இம்சையில் இருந்தோரை...
இமய மிசை ஏற்றினார்!
மடுவாய் இருந்தோரை
மலையாய் மாற்றினார்!
புதுவசந்தம்
புத்துணர்ச்சியின் புதுமை!
சேரன் பாண்டியன்
சிந்தை அள்ளிய பதுமை!
நாட்டாமை என்றாலே
நாக்கு இனிக்கும்!
பூவே உனக்காக
பூவாய் மணக்கும்!
உள்ளம் அள்ளும்!
இருக்கிறது இன்னும்
இனிய வரிசை
இயம்பிக் கொண்டே
இருக்கலாம்
இதயத்தின் பரிசை!
சவுத்ரித் தங்கம் - ஒரு
சாலை விபத்தில்
சவமாகிக் போனார்
சாமியோடு சாமியாய்
சமமாகிக் போனார்!
என்னை இப்போதும்
எப்போதும்
ரசிக்க வைத்த ரசவாதி
ரணமாகிப் போனார்!
நாட்டாமை நாயகனின்
நல்லடக்கத்தில்
நானும் கலக்கிறேன்...
மனமகிழ்ச்சி ஊட்டிய
மனிதனுக்கு
அடி நெஞ்சிலிருந்து
கவிபாடி நிறைக்கிறேன்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!
சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!
சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
{{comments.comment}}