லோக்சபா தேர்தலை எப்படி சந்திப்பது.. திமுகவுடன் கூட்டணியா.. மக்கள் நீதி மய்யம் ஆலோசனை!

Mar 27, 2023,12:45 PM IST
சென்னை: லோக்சபா தேர்தல் நிலைப்பாடு குறித்தும், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட கட்சிதான் மக்கள் நீதி மய்யம். எல்லோரும் எப்படா ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று போயஸ் கார்டன் பக்கம் பார்வையை புதைத்திருந்தபோது, யாரும் எதிர்பாராதவிதமாக ஆழ்வார்ப்பேட்டையிலிருந்து "ஆண்டவர்" அரசியல் என்ட்ரி கொடுத்து அதிர வைத்தார்.



டக்கென்று மக்கள் பார்வை கமல்ஹாசன் மீது பட.. மக்கள் நீதி மய்யம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். நிச்சயம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மயிரிழையில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார் கமல்ஹாசன்.

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்று அனைவரையும் வியப்பிலும் ஆழ்த்தியது. ஆனால் கமல்ஹாசனின் கட்சிக்கு அதன் பிறகு பெரிய அளவில் ஏற்றம் ஏற்படவில்லை. மாறாக கட்சித் தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு இடத்தைக் காலி செய்து திமுக பக்கம் போய் விட்டனர்.

இந்த நிலையில், சமீப காலமாக திமுக, காங்கிரஸ் பக்கம் கமல்ஹாசன் நெருங்கி வருகிறார். ராகுல் காந்தியுடன் சேர்ந்து டெல்லியில் நடை பயணம் மேற்கொண்டார். திமுக தரப்பிலும் நெருக்கம் பாராட்டி வருகிறார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா புகைப்படக் கண்காட்சியை கமல்ஹாசன்தான் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தலுக்காக தயாராக ஆரம்பித்துள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சி. தொகுதி வாரியாக கட்சியினருடன் ஆலோசனையை அது தொடங்கியுள்ளது . முதல் கட்டமாக நேற்று சென்னை வடக்கு, மத்தி, தெற்கு, ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதிகளின் பிரதிநி��ிகளுடன் கட்சித் தலைமை ஆலோசனை நடத்தியது. கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், துணைத் தலைவர் தங்கவேல் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்து லோக்சபா தொகுதிகளின் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடைபெறவுள்ளதாம். இதன் இறுதியில் கூட்டணி குறித்தும், தேர்தல் நிலைப்பாடு குறித்தும் கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று சொல்லப்படுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் தனது ஆதரவை நல்கியது. எனவே வருகிற லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணையலாம் என்ற பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி இணைந்தால் ராமநாதபுரம் அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் கமல் போட்டியிடக் கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: அனல் பறக்க முடிந்த சட்டசபைத் தேர்தல்.. வரலாறு காணாத வாக்குப் பதிவு!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்