முயற்சிங்க, விடா முயற்சி.. இப்ப தம்பி எங்க போய் நிக்கிறான் பாருங்க.. கலக்கிய Sofa boy!

Feb 03, 2024,10:26 PM IST

சென்னை: கடும் உழைப்பும், விடா முயற்சியும், கூடவே கொஞ்சம் புத்திசாலித்தனமும் இருந்தால் நீங்க நிச்சயம் ஜெயிக்க முடியும்.. லேட்டஸ்ட் உதாரணம் நம்ம முகம்மது ரசூல்.. யாருன்னு தெரியலையா.. அதாங்க, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் கலக்கிக் கொண்டிருக்கும் "சோஃபா" பையன்தான்.


தனது தந்தையின் நிப்யா பர்னிச்சர் நிறுவனத்தின் சோபா உள்ளிட்ட பொருட்களை விற்பதற்காக ரசூலே விளம்பரம் செய்ய இறங்கி, அது விளையாட்டு போல தொடர்ந்து, இப்போது வேற லெவலில் மாறி நிற்கிறார் இந்த குட்டி பிசினஸ்மேன். இவரது ரீல்ஸ்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தனது தந்தையின் பர்னிச்சர்கள் குறித்தும், தங்களது கடையில் இருக்கும் சோபாக்கள் குறித்தும் ரசூல் விவரிக்கும் விதமே சூப்பராக இருக்கும். சோபா வாங்குகிறோமோ இல்லையே, ரசூல் தனது குழந்தைத்தனமான குரலில் பேசுவதைக் கேட்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.


ரசூலின் இந்த சாமர்த்தியான பேச்சு பலரது பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தாலும், கூட சின்னப் பையனை வைத்து இப்படியா விளம்பரம் தேடுவது என்றும் சிலர் விமர்சிக்கவே செய்தனர். இதுவும் கூட ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளர் வகையில் சேரும் என்றும் சிலர் விமர்சித்தனர். ஆனால் ரசூல் எதையும் மனதில் போட்டுக் கொள்வதில்லை.  எங்க அப்பாவுக்காக நான் பண்றேன்.. என்று கூறி தொடர்ந்து செய்து வருகிறார் ரசூல்.




விடாமல் தொடர்ந்து வீடியோக்கள் போட்டு வந்த ரசூலுக்கு இன்ற வேற லெவலில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.. உண்மையில் இது பாராட்டுக்குரியது.. அந்தப் பாராட்டுக்கள் அத்தனையும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்குத்தான் போக வேண்டும். ரசூலிடம் காணப்படும் அந்த பேச்சுத் திறமையை கரெக்டாக பிடித்துக் கொண்டு போய் ரசூலை முக்கியமான இடத்தில் உட்கார வைத்து வெளிஉலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.. இன்னொரு கோணத்தில்.


விக்னேஷ் சிவன், தான் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தில் ரசூலை நடிக்க வைத்துள்ளார். கண்டிப்பாக காமெடி வேடமாகத்தான் இருக்கும்.. இதுதொடர்பாக ஒரு பிஆர் வீடியோவையும் அவர் போட்டுள்ளார். திருமூர்த்தி அணைக்கு ஷூட்டிங் போன இடத்தில் ரசூலை பேச வைத்து கலகலப்பை ஏற்படுத்தியுள்ளனர். ரசூலும் தனது பாணியில் பட்டாசாக வெடித்து கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.


"என்னை இந்த பர்னிச்சர்களை வித்துக் காட்டுன்னு சொல்லிருக்காங்க.. வாங்க பார்ப்போம்" என்று கூறி .. இது தான் டைரக்டர் சோபா, இது ஹீரோ சோபா, இது காமெடி சோபா என்று விக்னேஷ் சிவன், ஹீரோ பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் குறித்து தனது பாணியில் காமெடியாக பேசப் பேச வெடித்து சிரிக்கிறார்கள் எல்லோரும். 


நல்லா பேசி முடிச்சுட்டு, கடைசியில் நல்ல சோபா வேணும்னா எங்க கடைக்கு  வாங்க, இதெல்லாம் சினிமா சோபா என்று கூறி தனது கடைக்கு விளம்பரம் தேட.. கூட்டமே கலகலத்து சிரிக்கிறது.. நீங்களும் அந்த வீடியோவைப் பாருங்க.. செம ஜாலியாக இருக்கிறது.


ரசூல் தம்பி.. நல்லா வளர்ந்து வா.. நிறையப் பேருக்கு நீ இன்ஸ்பிரேஷன்..!


Watch: https://www.instagram.com/p/C236iVkPBGx/?hl=en

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்