- ஹைதராபாத் தனலட்சுமி
எல்லோருக்குமே காலைல எழுவது போல ஒரு கஷ்டம் இருக்காதுங்க.. அதுவும் திங்கள்கிழமை காலை எழுவதுதான் இருப்பதிலேயே பெரும் சோதனை.
ஆமாங்க.. இந்த காலை நேர கஷ்டத்தைப் பத்தித்தான் இப்போ பேசப் போறோம்.. முதல்ல அனைவருக்கும் காலை வணக்கம்.. காலைல எழுந்தவுடன் அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு; "காப்பிய போடுற காலம் போய்.. இப்போ செல்போனை கையில எடுத்து; எப்படி காப்பி போடறது?? அப்படின்னு பாக்குற பிரண்ட்ஸ் தாங்க அதிகமா இருக்கிறாங்க.
அவங்களைச் சொல்லி குத்தமில்லீங்க.. காலம் அப்படி மாறிப் போய் விட்டது.. இவங்களுக்கெல்லாம் இன்னைக்கு என்ன மெசேஜ் சொல்ல போறேன்னா .. ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா சொல்றது ஒன்னே ஒன்னுதாங்க.. நாம தெளிவா இருக்குற வரைக்கும் நம்மளை யாராலும் வீழ்த்த முடியாதுங்க.. அதை மட்டும் நல்ல மனசுல தெளிவா வச்சுக்கோங்க.
நிறையப் பேரிடம் இருப்பது சோம்பேறித்தனம்தான். அதுதான் காலையில் எழுவதற்கு நமக்கு கஷ்டத்தைக் கொடுக்குது. அதுக்குத்தான் நிறைய விஷயங்களை பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க. அதிகாலையில் எழுந்து, உடற்பயிற்சி செய்து விட்டு, குளித்து விட்டு வேலையில் இறங்கிப் பாருங்க.. அன்னிக்கு நாள் முழுக்க பிரஷ்ஷா இருக்குமாம். அதை செஞ்சு பார்த்தவங்க சொல்றாங்க.. செய்யாம இருப்பவங்க செய்ய ஆரம்பிங்க.. என்ன மாதிரி சேஞ்ச் வருதுன்னு பார்க்கலாம்.
அடுத்ததா.. வாழ்க்கையில் எல்லா விஷயத்துக்குமே மோர் தேன் ஒரு சான்ஸ் இருக்கும்ங்க.. சான்ஸ் இருக்கும்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்! எதுக்குங்க பயந்துகிட்டு?? பயப்படாதீங்க.. துணிந்து இறங்கலாம் வாங்க... நம்மளால நேத்து செஞ்ச தப்பை டைம் லைன் மெஷின் போய் சரி செய்ய முடியாதுங்க ஆனா ஃபியூச்சர் அதாங்க (நாளை ) அதை மறுபடியும் பண்ணாம பாத்துக்க வேண்டியது நம்மளோட கடமை..
கோவப்படுறது என்னமோ ஒரு நிமிஷம் தாங்க. ஆனா அதோட கஷ்டத்தையும் அதோட வலிகளை அனுபவிக்கிறது நம்மளால காலத்துக்கும் மறக்க முடியாது. சரிதானே பிரண்ட்ஸ்..??. ஏமாந்து போறது யாருக்குமே புதுசு இல்லைங்க.. அது பழகிரும்.. அதுல எந்த மாற்றமும் கிடையாது.. ஆனால் தொடர்ந்து ஏமாறம இருக்கணும். அதுதான் முக்கியம்.
சிலரது முகமூடி கீழ விழற வரைக்கும் அது கூட நம்ம அவங்களுடைய இயல்பு தானே என்று நம்பிகிட்டு இருக்கிறோம்.. அதையும் புரிந்து கொள்ளும்போது நாம சரியாகிடுவோம்..
ஓகே.. டீ சாப்பிட டைம் ஆயிடுச்சு.. மீண்டும் ஒரு நல்ல மார்னிங் மெசேஜ்ல மறுபடியும் சந்திப்போம்.. பை!
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}