- கவிதை மழை அ.நவஜோதி அருண்
அண்டத்து
சூரியன்
பிண்டம்
மறைத்த பின்
பிறந்தது
நிசப்தத்தின்
பிடியில்..
நீண்டு
கிடந்தது
கானகமும்
வானகமும்
கருப்பு
அப்பியது
தூரத்து
நிலவே...
ஒளியைத்
துப்பியது...

எண்ணங்கள்
அடங்கி
கனவுகள்
ஆனது...
வண்ணங்கள்
முழுதும்
கனவுக்குள்
போனது
கண்ணங்
கருமையே இருளின்
உறவானது
நடுநிசி
நேரமே
நித்திரையில்
தவழ்ந்தது
நட்சத்திரங்களே
மின்னிமின்னி
மறைந்தது
தொடர்ந்து
கடந்தது....
காற்றின்
ஒலி....
ஏனோ
எதற்கோ
சத்தமிடும்...
சுவர்க்கோழி
கடிப்பதற்கு
எலும்பு
மட்டுமல்ல....
மனிதர்களும்
கிடைக்காத...
நாய்கள்
நடந்தபடி
வளைந்து
நெளிந்த
பாம்பெனத்
தெருக்களின்
வழி
விசிலடித்து
விழித்திருக்கும்
காவலாளி
காத்தபடி
போதையேற
தன்னைமறந்த
குடிகாரன்
பாதைவழி
கேட்காமலே
உதிரம் குடித்த
கொசுக்களின்
ரீங்கார ஒலி
எங்கோ?
உறங்காமல்
பல்லைக் காட்டும்
மழலைவிழி..
உறங்காததால்
தூளியாட்டும்
அன்னைவலி
கூடவே.....
கள்ளம்
வைக்க...
கன்னம்
வைத்துக்
கள்வனும்
கள்வனைப்
பிடிக்க
காத்திருக்கும்
காவலனும்
உழைத்துக்
களைத்த
உயிர்களின்
உறக்கமும்...
உடலை
புதுப்பிக்கும்
செல்களின்
இயக்கமும்...
விடியலை
தேடும்
இரவின்
ஏக்கமும் சேர
நடுசாமமே
நித்திரை
பீடிக்க....
அர்த்தசாமத்தின்
அழகேஅழகு..
இரவின்
இனிமையும்
அமானுஷ்யமும்
அற்புதமாக...
எழுத்தாணி
கருமை
நிரப்பி...
இன்னும்
உறங்காமல்
இரவைக்
கவிதையாக்கும்
கவிஞன்நான்
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆயுதத்தை விட்டெறிந்து அன்பை காணிக்கையாக்குங்கள்
{{comments.comment}}