டெல்லி : சந்திரயான் 3 திட்டத்தை கேலி செய்யும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்காக நெட்டிசன்கள் பலரும் அவரை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரகாஷ் ராஜ். ஆரம்பத்தில் வில்லன் ரோல்களில் மட்டுமே நடித்து வந்த பிரகாஷ் ராஜ், பிறகு குணச்சித்திர ரோல்களில், காமெடி கலந்த வில்லன்கள் ரோல்கள் இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் வில்லன் நடிகராக இருந்து வருகிறார். நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்து விட்ட பிரகாஷ் ராஜ், தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது அரசியல் தொடர்பாக, மொழி தொடர்பாக ஏதாவது ஒரு சர்ச்சைக் கருத்தை கூறி சர்ச்சையிலும் சிக்கி வருவது வாடிக்கையாகி வருகிறது. இதில் லேட்டஸ்டாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தை கேலி செய்யும் விதமான ட்விட்டரில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி உள்ளது. இது வெற்றிகமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி வருகிறது. ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை 6.45 மணிக்கு நிலவின் தரைப்பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. இந்த தருணத்தை இந்தியா மட்டுமல்ல உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் நிலவின் நீள்வட்ட பாதையில் பயணம் செய்த சந்திரயான் 3 விண்கலம், நிலவின் வெளிப்புற நிலப்பரப்பை கருப்பு வெள்ளை போட்டோவாக எடுத்து அனுப்பி இருந்தது. இதை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் கருப்பான உருவத்துடன் லுங்கி அணிந்த டீ மாஸ்டர் ஒருவர் டீ ஆத்தும் கார்டூன் போட்டோ ஒன்றை பகிர்ந்து, சந்திரயான் 3 அனுப்பிய முதல் போட்டோ. வாவ்... என கேப்ஷன் பதிவிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் போட்டிருந்தார் பிரகாஷ் ராஜ். இதை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகி, பிரகாஷ் ராஜை திட்டி தீர்த்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ், இந்திய விஞ்ஞானத்தின் முயற்சியை, திட்டத்தை கேலி செய்து விதமாக இந்த போஸ்டை பகிர்ந்துள்ளார் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பிரகாஷ் ராஜிற்கு அறிவியலுக்கும் அரசியலுக்கும் கூட வித்தியாசம் தெரியாது போல. பிரகாஷ் ராஜின் விஞ்ஞான அறிவு எப்படிப்பட்டது என இதிலிருந்தே தெரிகிறது என பலரும் கடுமையாக திட்டி வருகின்றனர். இன்னும் சிலர் விஞ்ஞானம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்னவென்றும் பிரகாஷ் ராஜிற்கு பாடம் எடுத்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவானது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அக்டோபர் 26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்!
தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டம்: அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு
தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் விலைவாசி உயர்வு - அயர்ச்சியில் மக்கள் - காரணங்கள், தீர்வுகள்!
கோடை எப்எம் மட்டும்தான் - அதுவும் 2 மணி நேரம்தான் - மறக்க முடியாத ஸ்கூல் டேஸ்!
இரவுக்குப் பின்னால் ஒரு விடியல் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (7)
"அப்படீன்னா சாரதா இங்கேதான் இருக்காளா".. கடைசி பெஞ்சில் இருந்த பெண் (2)
சமையல் With ஸ்வர்ணா: ஸ்ப்ரவுடட் சன்னா வெஜிடபிள் சாலட் -வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!
துலா ஸ்நானம் என்றால் என்ன?- ஐப்பசி மாதம் தோன்றிய விதம் இதுதான்!
ஈரோடு வந்திருக்கீங்களா- கோணப் புளியங்கா சாப்பிட்டிருக்கீங்களா? - சொல்றேன் கேளுங்!
{{comments.comment}}