தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

Feb 12, 2026,06:31 PM IST

சென்னை: தமிழகத்தில் வருகின்ற 15ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 


இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் 15 ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.


தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,




12-02-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


13-02-2026: தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


14-02-2026: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


15-02-2026 மற்றும் 16-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


17-02-2026 மற்றும் 18-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


இன்று (12-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


நாளை (13-02-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

news

செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

கதையல்ல நிஜம்: "சாண்ட்விச்" ஜெனரேஷன்.. அந்தப் பக்கமும் போகாமல்.. இங்குட்டும் நகர முடியாமல்!

news

Good afternoon Recipe: மென்மையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

news

உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!

news

Sudha Thirunarayanan Cute Story: கோலம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

அதிகம் பார்க்கும் செய்திகள்