சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்திருந்த நிலையில் இன்றும் நேற்றைய விலையே தொடர்கிறது. கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்திருந்தனர். இந்நிலையில் தங்கம் விலை நேற்று குறைந்ததால் சற்று மகிழ்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், அந்த விலையே இன்றும் தொடர்ந்து வருவதால் மீண்டும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,860 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,880 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,484 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,872 ஆக உள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
நேற்று குறைந்திருந்த வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.1.30 காசுகள் குறைந்து ரூ.100.30க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 802.40 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000 இருந்த விலை இன்று ரூ.1,00,300க்கு விற்கப்படுகிறது.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}