சென்னை: கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை ஏறத் துவங்கி உள்ளது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்றாவது குறையுமா? என்று பார்த்தால் ஏமாற்றம் தான் மிச்சம். ஏன்னா தங்கம் விலை இன்றும் உயர்வே.
"தங்கம் விலை கம்மி" அது.. போன மாசம்.. அப்ப இப்ப.. தாறுமாறா ஏறுது.. இதை நினைக்கும் போதே வடிவேலு காமடி தான் நினைவுக்கு வருகிறது. "அது போன மாசம் இது இந்த மாசம்"னு தங்கம் தெனாவெட்டாக கூறுவது போலத் தேன்றுகிறது.
"விடுப்பா விடுப்பா.. புரட்டாசி வந்தா விலை குறையறதும், ஐப்பசி பிறந்தா விலை ஏறுறதும் சகஜம்தானே" என்று பெரிய கருப்பத் தேவர் காதைக் குடைஞ்சுகிட்டே சினிமாவில் பேசும் வசனமும் கூடவே வந்து நெஞ்சைக் கடைகிறது.. சரி அதை விடுங்க.. இன்னக்கி விலை என்ன தெரியுமா..!

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் இதாங்க:
1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5675 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45400 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6191 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 16 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.49528 ஆக உள்ளது.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று குறைந்து உள்ளது. நேற்றைய விலையில் இருந்து 50 காசு குறைந்து, 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 596.80 காசாக உள்ளது.
தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போறது கிடையாது. என்ன தான் செய்யன்னு புலம்பிக்கிட்டே தான் நடுத்தர மக்கள் வாங்கிட்டு இருக்காங்க... நகை கடையில எல்லாம் அவ்வளவு கூட்டம் அலைமோதுது.. தீபாவளி, நவராத்திரி, விசேசங்கள் என விழாக் காலம் என்பதால் தான் இந்த கூட்டம்னு நகை கடை உரிமையாளர்கள் கூறு வருகின்றனர்.. இப்படிக் கஷ்டப்பட்டாவது தங்கம் வாங்குவது ஏன்னா.. அது நல்ல முதலீடு என்பதால்தான்.. !
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}