தேர்வு.. ஒரு நிமிடக் கதை (35)

Oct 14, 2026,09:59 AM IST

- பூரணவள்ளி சேகர்


கார்த்திகேயன்  தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தான். தனக்குத் தெரியாத மேலும் சந்தேகமாக இருக்கும் பாடப் பகுதிகளை  கண்ணனிடம் கேட்டுத் தெளிந்தான். கண்ணன் நன்கு படிப்பவன். ஆதலால் கார்த்திக்கின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைத்தான்.


எவ்வளவு படித்தாலும் அவ்வப்பொழுது கார்த்திக் மறந்து விட்டு மறுபடியும் மறுபடியும் கண்ணனிடம் சந்தேகம் கேட்பான். கண்ணனும் சலிப்பின்றி சொல்லிக் கொடுத்தான்.


தேர்வு நாளன்று கார்த்திக் மிகவும் பதட்டத்துடன் இருந்தான். கண்ணன் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறி வாழ்த்தினான். தேர்வு முடிந்தது. ஓரளவு சிறப்பாகச் செய்ததாக கார்த்திக் சொன்னான்.




ஒரு மாதம் கழித்தது. தேர்வு முடிவுகள் வெளியாயின.  தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றான். கார்த்திகேயன் மற்றும் கண்ணன் இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. கார்த்திக்கின் மனைவி மிகவும் மகிழ்ந்தாள்.


கண்ணன் தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பணியில் ஓய்வு பெற இன்னும் சில ஆண்டுகளே உள்ள நிலையில் தன் தந்தை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதைக் கூறி மகிழ்ந்தான்!


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆயுதத்தை விட்டெறிந்து அன்பை காணிக்கையாக்குங்கள்

news

நானிருக்கிறேன் உனக்கு

news

தேர்வு.. ஒரு நிமிடக் கதை (35)

news

Thentamil Editorial: சாட்டையைச் சுற்றி அப்படி சுழற்றி விட்டா.. விளையாட்டுகளின் ராஜா.. பம்பரம்!

news

North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

news

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

news

Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்

news

6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்