மனிதன் எப்போது மாமனிதன் ஆகிறான்?

Oct 05, 2026,01:58 PM IST

- பசுங்கிளி


ஒரு மனிதனாவன் நல்ல செயல்கள் நல்ல எண்ணங்கள் பிறருக்கு உதவும் குணங்கள் பொதுச் சேவைகள்

செய்யும் போதுதான் மாமனிதன் ஆகிறான். மாற்றுத்திறனாளிகள் நம்ம சமூகத்தில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கிறார்கள். அவர்களும் நம்ம மாதிரியே கனவுகள் திறன்கள் ஆசைகள் எல்லாம் உடையவர்கள், அவர்களையும்

மனிதனாக மதித்து அவர்களுடைய தேவைகளை புரிந்து பள்ளிகள், கல்லூரிகள், பல நிறுவனங்களில் , பொதுசேவைகள் எல்லாவற்றிலும் சம அளவு வாய்ப்பு கொடுப்பது மிகவும் முக்கியம்.


அவர்களுக்கு ஏற்ற அணுகுமுறை ஊக்கம் அன்பு தட்டிக்கொடுத்தல் இருந்தால் அவர்களும் தங்களுடைய திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த முடியும், மாற்று திறனாளிகள் என்றால் உடல், பார்வை, கேள்வி, கற்றல் பல வேறுபட்ட தேவைகள் உள்ள மனிதர்கள், பணிகளிலும் வேலைத்தளங்களிலும் சேவைகள் மற்றும் புரிந்துணர்வு சூழல் இருந்தால் அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இன்னும் தயங்க மாட்டார்கள்.




சமமான வாய்ப்பு என்பது கருணை அல்ல. அது நியாயமும் உரிமையும், விளையாட்டிலும் கலையிலும், படிப்பிலும் வேலையிலும் அவர்களின் முன்னேற்றம் நமக்கெல்லாம் ஊக்கமும், பெருமையும் தரும். நம் வீட்டிலோ, தெருவிலோ நம் ஊரிலோ ஒரு மாற்றுத்திறனாளி இருந்தால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களை ஊக்குவிக்க

சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வருவோம்.


உடல் உறுப்புகள் நன்றாக இருந்தும் சிலரின் மனதில் குறைகள் அதிகம், அன்பில்லாத மனம், அகந்தை, பொறாமை

சுயநலம், பிறரை இகழ்வது, பாகுபாடு, மனிதநேயமின்மை , மன்னிக்காத குணம் உதவ மனமின்மை பிறர் வலியை உணராத மனம் இவைகள்தான் உண்மையான ஊனம் .


ஒரு வாய் பேசாத பெண்ணிடம் பேசிப்பாருங்கள் அவள் கண்களும் கவிபாடும் . கைகள் அபிநயம் பிடிக்கும்

கால்கள் பரதம் ஆடும் .அவளுடைய புத்தி கூர்மை விரைவாக செயல்படும். கால்கள் நடக்க முடியாத ஒரு இளைஞனிடம் பேசிப்பாருங்கள். அவர்களுக்கு பேச்சுத்திறமை அதிகமாக இருக்கும். கைகளை கொண்டு புத்தியை கொண்டு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். 


நாம் எல்லோரும் சேர்ந்து மாற்றுத்திறனாளிகளுடன் கை கோர்த்து மதிப்பும் மரியாதையும் கொடுத்தால் சமூகம் இன்னும் வலுவாகவும் மனித நேயத்துடனும் மாறும் அவர்களுடைய வெற்றி நம் வெற்றியாகும். உடல் ஊனம் ஊனமல்ல, மனதின் ஊனமே ஊனம்.  நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்வோம். நம்பிக்கை கொடுப்போம் மாற்று திறனாளிகளை சமமாக பார்ப்போம் சமூகத்தில் வெற்றி பெறுவோம். மனிதன் மா மனிதன் ஆகலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்