நண்பனே வாழ்க பல்லாண்டு!

Jul 15, 2026,03:05 PM IST
- பசுங்கிளி

நண்பனே வாழ்க பல்லாண்டு,
மதுவின் பிடியில் சிக்கிக்கொண்டு
உன் மதியை இழந்து விடாதே!

மதுவை அறவே நிறுத்திவிடு,
மரணம் வருவதைத் தடுத்துவிடு.
குடும்பம் இருப்பதை நினைத்துவிடு.

உன் வாழ்விலும்
சில ஏமாற்றங்கள் இருக்கலாம்;
அதற்காக உன் உயிரைவிட
எதுவும் பெரிதல்ல.

மதுவை அறவே நிறுத்திவிடு,
உன் மரணம் வருவதைத் தடுத்துவிடு.



இறைவன் படைத்த உலகினிலே
பண்பாய் பழகிட பலர் இருக்க,
தனிமை என்று நினைத்து
தவித்திடாதே நண்பா.

மதுவை அறவே நிறுத்திவிடு,
உன் மரணம் வருவதைத் தடுத்துவிடு.

சிரித்திடும் பூவாய்
உன் மகனும் சிரிக்கிறான்;
அந்தப் பிஞ்சு மனதை
சிதைத்திடாதே.

மதுவை அறவே நிறுத்திவிடு,
உன் மரணம் வருவதைத் தடுத்துவிடு.

இந்த உலகம் முழுதும்
உன் பக்கம்தான்;
நீ உறுதியோடு நின்றால்
அது சொர்க்கம்தான்.

மதுவை அறவே நிறுத்திவிடு,
உன் மரணம் வருவதைத் தடுத்துவிடு.

வாழ நினைத்தால் வாழ்ந்திடலாம்,
இந்த வையகம் வாழ்த்த
வாழ்ந்திடலாம்.

மதுவை அறவே நிறுத்திவிடு,
உன் மரணம் வருவதைத் தடுத்துவிடு.

இறைவன் படைத்த உலகினிலே
இன்னும் பல இன்பங்கள் காத்திருக்கின்றன;
வாழ்ந்து பார்ப்போம் வா நண்பா,
நம்பிக்கையோடு நடந்திடுவோம்.

நண்பனே, வாழ்க பல்லாண்டு!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

The Little Girl of Sangeeth Library.. பெரிய உலகத்தைத் திறந்து விட்ட சின்னக் கதவு!

news

பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

news

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!

news

தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி

news

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!

news

பெருந்தலைவர் காமராஜர்.. விருதுநகர் மண்ணில் வீரம் முளைத்த நாள் !

news

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள அமைச்சர்

news

நண்பனே வாழ்க பல்லாண்டு!

news

சிந்தனைச் சிதறல்.. மதிக்காத ஓராயிரம் உறவுகளை விட .. உயிராய் மதிக்கும் ஒரு உறவு போதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்