- பூரணவள்ளி சேகர்
தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு தீபாவளி போனஸ் கிடைக்குமா? ஆயுதபூஜை சிறப்புப் பரிசு அல்வா தானா என்ற எண்ணம் இருந்தது.
கமலேஷ் பத்தாண்டுகளுக்கும் மேலாக மிட்டாய் கம்பெனியை நடத்தி வந்தான். மிட்டாய் நல்ல சுவையாக இருந்ததால் நன்கு விற்பனை ஆனது.
தன் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸாக இரண்டு மாத ஊதியம் வழங்குவது வழக்கம். அது மட்டுமில்லாமல் ஆயுதபூஜையன்றுஒரு நல்ல பெரிய பாத்திரம் பழங்கள் ஸ்வீட் காரம் இவற்றுடன் புதுத்துணி களையும் வழங்குவதும் உண்டு.
தொழிலாளர்கள் எப்போதும் மன நிறைவுடன் வேலை செய்தனர். இந்த ஆண்டு கமலேஷின் மனைவிக்கு உடல் நலமின்மையால் கம்பெனியில் கவனம் செலுத்த முடியாமல் போனது. கம்பெனி நட்டத்தில் ஓடுவது பற்றி தொழிலாளர்கள் அறிவார்கள்.

இந்த ஆண்டு ஆயுதபூஜை வருவதற்கு முன்பே இந்த முறை நமக்கு தீபாவளி போனஸ் ஏதும் கிடைக்காது என்றும் ஆயுதபூஜை பரிசுகள் கூட கிடைக்காது என்றும் பேசிக் கொண்டனர். ஆயுதபூஜையன்று எப்போதும் போல் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பூஜை முடிந்ததும் ஒரு பையில் பழங்கள் ஸ்வீட் துணிகள் இருந்தன.
பானை குடம் போன்ற பாத்திரம் ஏதும் கிடைக்கவில்லையே என்று தொழிலாளர்களின் மனதில் சிறிது வருத்தம் ஏற்பட்டது. அதனைக் காட்டிக் கொள்ளாமல் பையைப் பெற்றுக் கொண்டனர்.
கமலேஷ் கொடுத்த துணிகளுக்கிடையில் பத்து கிராம் மதிப்புடைய வெள்ளிக் காசு இருந்தது. கமலேஷ் பேசும் போது என் கவலைக்காக உங்களைக் கைவிட மாட்டேன். எப்போதும் போல் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்து வழங்கினார்.
கமலேஷின் மனைவி உடல் நலமாகி அவரது ஆலோசனையின் படி ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. அனைத்து தொழிலாளர்களும் மறுநாள் முதல் மேலும் சிறப்பாகப் பணிபுரிந்தனர்
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
Oru Nimida Kathai: ஆயுதபூஜை.. ஒரு நிமிடக் கதை (40)
ஐப்பசி மாத சிறப்புகள்.. விசேஷ நாட்கள் மற்றும் விரத நாட்கள்
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
{{comments.comment}}