சென்னை தொழில்முனைவோர் தி.ஸ்ரீரகுராமனுக்கு பிரைட் ஆப் தமிழ்நாடு விருது

Oct 15, 2026,04:35 PM IST

புதுச்சேரி: சென்னை முகப்பேரைச் சேர்ந்த தொழில்முனைவோர் தி. ஸ்ரீரகுராமனுக்கு, செ. வெ. ரெக்கார்ட் ஹோல்டர் ஃபோரம் சார்பில் 'Pride of Tamil Nadu 2026' விருது வழங்கப்பட்டது.   


புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் சம்மேளண சங்கத்தில், 6ஆம் ஆண்டு ஆசிரியர் தின விழா 11 அக்டோபர் 2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், கலை, இலக்கியம் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.   


விருதை செ. வெ. ரெக்கார்ட் ஹோல்டர் ஃபோரத்தின் நிறுவனர், உலக சாதனையாளர் அம்ப். டாக்டர் செ. வேங்கடேசன் வழங்கினார். விழாவில் தமிழறிஞர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  




தி. ஸ்ரீ ரகு ராமன், கனடாவைச் சேர்ந்த Yanvi Robotics Inc. நிறுவனத்தின் Founder and CEO ஆவார். இவர் கணினி அறிவியலில் BE பட்டமும், நிதி மேலாண்மையில் MBA பட்டமும் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்கள் செயற்கை நுண்ணறிவைப் பயனுள்ளதாகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில், 2026 மார்ச் மாதம் Yanvi Robotics நிறுவனத்தைத் தொடங்கினார்.   


Yanvi Robotics நிறுவனம், டிஜிட்டல் பணிகளை எளிதாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்பட்ட நுகர்வோர் ரோபோக்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவின் 'Make in India' முன்னெடுப்புக்கு பங்களிக்கும் வகையில், ரோபோட்டிக்ஸ் பொறியியல் பணிகள் கனடாவில் மேற்கொள்ளப்பட்டு, உற்பத்தி சென்னை நகரில் நடைபெறுகிறது.   


இதற்கு முன்னர், செப்டம்பர் 2026-ல் Wisdom Path Foundation சார்பில் வழங்கப்பட்ட 'Man of Excellence 2026' விருதையும் அவர் பெற்றுள்ளார்.   


"இந்த விருது எனது தனிப்பட்ட முயற்சிகளுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல; தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் தொழில்நுட்பம், கலை மற்றும் சமூகப் பங்களிப்புகளில் முன்னேற வேண்டும் என்ற ஊக்கமாகவும் இதை கருதுகிறேன்.கல்வி மட்டுமே தனிநபர்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்தக்கூடிய கருவி என்று நான் நம்புகிறேன்," என்று தி. ஸ்ரீ ரகு ராமன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்