- கவிஞர் பி.எஸ்.முருகேசன், திண்டுக்கல்
மூத்தோர் சொல் வார்த்தை எல்லாம்
தூக்கித் தூரம் வீசுதே
நான் புடிச்ச முயலுக்கு
மூனு காலுனு பேசுதே
தூக்கமின்றி தொலைபேசியில்
பேச்சும் தான் தொடருதே
காத்து வாக்குல சேதி
அங்கும் இங்கும் கசியுதே
சொந்த பந்தங்கள் எல்லாம்
கண்டபடி ஏசுதே

சிந்தனை மாறுதே
சினம் வந்து சேருதே
வாழ்க்கையில் தினம் தினம்
வம்பு வந்து சேருதே
சாதி மத பேதத்தால்
சண்டைகள் மூளுதே
சமத்துவ சிந்தனைகள்
சர்ச்சையில் சாகுதே
தீண்டாமை இன்னும் இங்கே
தீர்ந்து போக மறுக்குதே
திருமணம் முடிந்தாலும்
உறவுகள் வெறுக்குதே
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
சாடிய பாரதியின் கூற்று
சத்திய சோதனையில் தவிக்குதே
மனம் ஒத்து போனாலும்
சனம் ஒத்து போகாதே
சாதி மத பேதத்தால்
சமூக சீரழிவு ஆகுதே
பகுத்தறிவும் சமத்துவமும்
சாத்தியம் ஆகுமா
இல்லை சாகுமா
காலத்தின் கையில்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே!
தேனினும் இனிய.. பேரருள் நிறைந்த திருவாசகம்!
Happiness is not a destination; it is how we choose to live each day!
ராவணனின் ராமநாமம்
{{comments.comment}}