- கவிஞர் பி. எஸ். முருகேசன், திண்டுக்கல்
புடவை மேல
புடவை வாங்கி
புடவை வாங்க
கடனை வாங்கி
நாளும் பகலும்
சிரிக்குதடி சந்தி
கொஞ்சம் சிந்திக்க
வேணுமடி சாந்தி
தீபாவளி பொங்கலுக்கு
தினுசு தினுசா
வாங்கித் தந்தேன்
பொறந்த நாள் பண்டிகைக்கு
புதுப் புடவை
வாங்கித் தந்தேன்
அத்தனையும் பீரோவிலே
இருக்கு
அப்பறம் எதுக்கு
இத்தனை புடவை ஒனக்கு

ஆசைப்பட்டு ஆசைப்பட்டு
அள்ளிக்கிறாய் புடவை
ஆனாலும் உடுத்துவது
ஒன்னு ரெண்டு தடவை
எதாச்சும் சொன்னா
சாத்திக்கிறே கதவை
ஏடாகூடமா பேசி
மாத்திக்கிறே உறவை
அரசம்பட்டி ஆண்டி புள்ளே
அத்தான் மனசு
ரொம்ப வெள்ளை
என்னால் ஒனக்கு
இல்லடி தொல்லை
ஏண்டி கோபம்
மீறுது எல்லை
ஆனா ஊனா
எடுக்கிற கல்லை
அளவுக்கு மேலே
கொடுக்கிறே தொல்லை
வெதண்ட வாதம்
வேணாம் புள்ளே
விட்டுக் கொடுத்து
போகணும் புள்ளே
குடும்ப நிலமை
ஆணுக்குத் தெரியும்
கூட இருந்து
பாத்தாப் புரியும்
நாளுக்கு நாளு
கூடுதல் செலவு
நல்லது சொன்னா
கேட்கப் பழகு
வானும் மண்ணும்
பார்த்து ரசிக்கும்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
எனக்கும் கடிதம் வந்தது!
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
{{comments.comment}}