புதுச்சேரி: புதுச்சேரியில் 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 2026ல் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநில வளர்ச்சி நோக்கங்களையும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு, புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம், Ex-MLA அவர்கள் அதிகாரப்பூர்வமாக மாநில தேர்தல் அறிக்கை குழு (State Election Manifesto Committee) அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் கூறுகையில், குழுவின் தலைவர் மாநில சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவருடன் ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி இணைந்து செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். இந்த குழு, புதுச்சேரி மக்களின் தேவைகள், வளர்ச்சி பணிகள் மற்றும் சமூகநல திட்டங்கள் அனைத்தையும் விரிவாக ஆய்வு செய்து, புதுச்சேரியின் எதிர்கால முன்னேற்றத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பொது மக்களின் கருத்துகள், நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் புதுச்சேரியின் நீண்டகால வளர்ச்சி நோக்கங்களை ஒருங்கிணைத்து, மிகச் சிறந்த மற்றும் செயல்படுத்தக்கூடிய தேர்தல் அறிக்கையை உருவாக்குவதே இந்தக் குழுவின் முக்கிய இலக்காகும் என்றும், அத்துடன் பல்வேறு துறையைச் சார்ந்த நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}