எல்லோருக்கும் புரியும் நான்… எனக்குப் புரிவேனா? - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (3)

Oct 17, 2026,01:46 PM IST

- மு. ரம்யா ஆனந்த்


எல்லோரின் முகம் பார்த்து

எண்ணங்களைப் புரிந்துகொள்வேன்…


சொல்லாத சோகத்தைக்கூட

சொல்லாமலே அறிந்துகொள்வேன்…


மௌனத்தின் மொழி புரியும்,

மனதிற்குள் வலி புரியும்…


மற்றவர் கண்ணீர் கண்டால்

மனம் தானாய் கரைந்துவிடும்…


ஆனால்…


என் மனம் ஏன் கனக்கிறது?

என் விழிகள் ஏன் கலங்குகிறது?




எல்லோருக்கும் ஆறுதலாக

என் வார்த்தைகள் அமைந்திடுமே…


என் மனதின் பாரம் மட்டும்

யாரிடம் சென்று இறங்கிடுமே?


சிரிக்கிறேன்… சிரிக்கிறேன்…

சில வலிகளை மறைக்கிறேன்…


நலம் விசாரிக்கும் உலகத்திடம்

“நன்றாக இருக்கிறேன்” என்கிறேன்…


ஒருநாள் என் மனதிடமே

மெதுவாகக் கேட்டுக்கொள்வேன்…


“எல்லோரையும் புரிந்துகொண்டாய்…

உன்னை நீ புரிந்துகொண்டாயா?”


பிறர் மனதைப் புரிவது அன்பு…

தன் மனதைப் புரிவதும் அன்புதான்!


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்