- ஸ்வர்ணலட்சுமி
சேலம்: சேலத்தில் உள்ள ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் பெருவிழா நடைபெறவுள்ளது.
நிகழும் ஸ்ரீ விசுவா வசு வருடம் தை மாதம் 1ஆம் தேதி வியாழக்கிழமைமுதல் 5 ஆம்தேதி திங்கட்கிழமை வரை (15.01.2026 முதல் 19.01. 20 26 வரை ) சேலம் பொன்னம்மாப்பேட்டை& அரிசி பாளையம் மனூர் குல தெலுங்கு தேவாங்கர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் பெருவிழா பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற உள்ளது.
இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பண்டிகை தேவாங்க குல மக்கள் பொதுவாக யுகாதி மற்றும் தை மாதத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.இதில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள்,
அலங்காரங்கள், ஊர்வலங்கள், கத்தி போடுதல், மகளிர் கோலாட்டம், திருவிளக்கு பூஜை, வீரபத்ர சுவாமி வேடம் தரிப்பவர்கள், அன்னதானம், மற்றும் பால்குடம் ஏந்துதல் என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனை ஒட்டி பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த திருவிழா சௌடேஸ்வரி அம்மனின் கருணை,அருள் மற்றும் தெய்வீக சக்தியை போற்றும் வகையில் கொண்டாடப்படுகின்றது.
சௌடேஸ்வரி அம்மன் :

ஆதிகாலத்தில் அறன் முறை தவறாமல் ஆடைகள் நெய்யும் நூலை அதி துரிதமாய் பாற்கடல் சென்று தாமரை நூல் கொண்டு வார போது, தீது புரி ராட்சதர்கள் வாது உறை செய்திடவே , திசையெட்டும் அதிர..
சிம்ம வாகனம் ஏறி வந்த தாய் அவளே. மக்கள் குறை தீர்ப்பவள். அம்மனே.. ஆதியாக,ஜோதியாக, அம்பிகையாக, கௌமாரி ஆக, வைஷ்ணவியாக, வாராகி ஆக,இந்திராணி யாக, சாமுண்டியாக சிவதூதியாக, மகா காளியாக, சரஸ்வதி ஸ்வரூபிணியாக விளங்குபவளே ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்.
பொன்னம்மாபேட்டை ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் திருவிழா நிகழ்ச்சி நிரல் :
15. 0 1.2026- வியாழக்கிழமை சக்தி அழைப்பு அழைத்தல். (காலை 8 மணி அளவில் )
காலை 9:00 மணி- திருமஞ்சன ஊர்வலம்.
மதியம் 2 மணி- மகா நைவேத்தியம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
16.01.2026- தை 2 ஆம் நாள் வெள்ளிக்கிழமை:
காலை 6:00மணி அபிஷேகம்,அலங்காரம். வெல்லம் கோட்டைக்குள் சாமுண்டி தேவி அம்மன் சாந்த சொரூப அலங்காரம்.
காலை 8 மணிக்கு வீரக்குமாரர்கள் அல கு சேவையுடன் சாமுண்டி அழைத்தல், திருமஞ்சன ஊர்வலம்.
காலை 9: 30 மணிக்கு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் மகளிர் மன்றம் சார்பாக கோலாட்டம் நிகழ்ச்சி.
மதியம் 2:00 மணி -மகா நைவேத்தியம், மகா தீபா ராதனை மற்றும்பிரசாதம் வழங்குதல்.
மாலை 4:30 மணிக்கு ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் மகளிர் மன்றம் சார்பாக நடைபெறும் திருவிளக்கு பூஜை.
17.01.2026 தை 3 ஆம் நாள் சனிக்கிழமை :
காலை 6:00 மணி அபிஷேகம்,அலங்காரம் மூலஸ்தான புஷ்ப அலங்காரம்.
காலை 8 :00 மணி பால்குட ஊர்வலம்.
காலை 11 :00 மணி இறையருட்செல்வி திருமதி.எம்.சுமதி ஸ்ரீ அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு.
மதியம் 12 :00மணிக்கு மகா நைவேத்தியம் , மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
மாலை 4:30 மணிக்கு: கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெறும்.
மாலை 6:00 மணிக்கு மகா ஜோதி புறப்படுதல். மகாஜோதி வீரக்குமாரர்கள் அல கு சேவை மற்றும் சிவ கைலாய வாத்தியத்துடன் திருவீதி உலா வருதல்.
18. 01 .2026 தை 4 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை :
காலை 6:00 மணிக்கு அபிஷேகம்.ஆராதனை.
காலை 9 :00மணிக்கு மஞ்சள் நீர் மெர மனை. காலை
11 :00மணிக்கு தமிழக அரசின் காமராஜர் விருது பெற்ற சொல்லின் செல்வி திருமதி கே. ஹேமலதா அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு.
மாலை 6:00 மணிக்கு சீர்காழி சகோதரிகள், விஜய் டிவி டைட்டில் வின்னர் செல்வி ஆர். அருணா, ஆர். அகிலா அவர்களின் பக்தி இன்னிசை கச்சேரி.
இரவு 8 :00மணிக்கு சத்தாபரணம். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வருதல்.
19.01.20 26 தை 5ஆம் நாள் திங்கட்கிழமை :
காலை 10:00 மணிக்கு அபிஷேகம் ஆராதனை.
மதியம் 12:30 மணிக்கு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு அமிர்த படையல் பூஜை நடைபெறும்.
மாலை 6:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
விஜய்யிடம்.. காலை 11 மணி முதல் 4 மணி வரை.. சிபிஐ விசாரணை.. நாளை விசாரணை இல்லை என தகவல்
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி
2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்
{{comments.comment}}