சேலம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா !

Oct 23, 2026,11:18 AM IST

ஸ்வர்ணலட்சுமி


சேலம்: உலகிலேயே மிக உயரமான விஸ்வரூப ஸ்ரீ முத்துமலை முருகன், நூதன ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீ இடும்பன் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி 8 ஆம் நாள் காலை 10:00 மணி முதல் 11:00 மணிக்குள் நடைபெற உள்ளது.


இந்தத் திருக்கோவில் சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் புத்திர கவுண்டம்பாளையத்தில் அமையப்பெற்றுள்ளது.


நீர்வளமும், நிலவளமும் மிக்க ஏற்றம் தரும் ஏத்தாப்பூர், புத்திர கவுண்டம்பாளையத்தில் வசிஷ்ட நதிக்கரையில் தென்பாக்கம் கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளிக்கும் யுக புருஷனாக விளங்கக்கூடியவரும், இடது கையில் வேல் தாங்கி சத்ரு சம்ஹார மூர்த்தியாகவும், தீயோர்களை அழித்து நல்லோர்களைக் காக்கும் பொருட்டு உலகிலேயே மிக உயரமாக விஸ்வரூப கோலம் கொண்டு எழுந்தருளி அருள் புரிந்து வருகிறார் தமிழ்க் கடவுளாம் நம் ஸ்ரீ முத்துமலை முருகப்பெருமான்.


அவருக்குப் புதியதாகப் பஞ்சவர்ணம் தீட்டப்பெற்று, சித்திர அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டும், ஐந்து நிலைகள் கொண்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நூதன ராஜகோபுரம் மற்றும் முருகப்பெருமானின் அடியவர்களுள் முதன்மையானவரும், திருப்புகழ் அருளிய ஸ்ரீ அருணகிரிநாதருக்கும், முருகப்பெருமானின் வழிபாடுகளில் சிறந்ததான காவடி வழிபாட்டைத் தோற்றுவித்த ஸ்ரீ இடும்பனுக்கும் தனித்தனியாக விமானத்துடன் கூடிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.




ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு காலயாக சாலை பூஜைகளுடன், ஆதீன மடாதிபதிகளின் முன்னிலையில் விஸ்வரூப ஸ்ரீ முத்துமலை முருகப்பெருமான், நூதன ராஜகோபுரம், ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீ இடும்பன் சன்னதிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக வைபவம் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.


21.10.2026 ஐப்பசி நான்காம் தேதி புதன்கிழமை முதல் ஹோமங்கள், பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

22.10.2026 காலை 7:30 மணி முதல் ஸ்ரீ முத்துமலை முருகப்பெருமான் மூலவர் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

வசிஷ்ட நதிக்கரையில் இருந்து புனித நீர் எடுத்து வருதல் நடைபெற்றது.


காலை 9:00 மணிக்கு ஸ்ரீ சாம்பமூர்த்தீஸ்வரர் கோவிலில் இருந்து, பூங்கரகம், முளைப்பாரி, தீர்த்த குடம், கையிலை வாத்தியங்கள், மயிலாட்டம், காவடியாட்டம், நாதஸ்வர வாத்தியம், மலைமேளம், கேரளா செண்டை மேளம், பம்பை மேள வாத்தியங்களுடன் யானை, குதிரையுடன் பிரதான தீர்த்த குட ஊர்வலம், நூதன விமான கலசங்கள், ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீ இடும்பன் மூர்த்திகள் பட்டினப்பிரவேசம் நடைபெற்றது.


பக்தர்கள் மகா கும்பாபிஷேக விழாவினைக் காண திரளாகக் குவிந்த வண்ணம் உள்ளனர்.


ஸ்ரீ முத்துமலை முருகன் அருள் அனைவரும் பெறுவோமாக.


மேலும் இதுபோன்று சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மழைக்கு இதமான இட்லி, தோசைக்கு சுவையான பொட்டுக்கடலை சாம்பார்!

news

வங்கக்கடலில் உருவானது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அக்டோபர் 26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்!

news

தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் விலைவாசி உயர்வு - அயர்ச்சியில் மக்கள் - காரணங்கள், தீர்வுகள்!

news

சேலம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா !

news

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!

news

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் - விஸ்டாடோம்: கண்ணாடிப்பெட்டிக்குள் புதிய பயண அனுபவம்!

news

2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை

news

Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?

news

Evening நொறுக்ஸ்: சுடச் சுட சுவையான அரைக்கீரை போண்டா!

அதிகம் பார்க்கும் செய்திகள்