சமையல் With ஸ்வர்ணா.. வீட்டுக்காரருக்கு உப்புமா போரடிக்குதா.. இருக்கவே இருக்கே ரவா பொங்கல்!

Oct 12, 2026,03:49 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


இட்லி தோசை மாவு வீட்டில் இல்லாத நிலையில் ஏதாவது உப்புமா செய்யலாமே.. கிச்சடி செய்யலாமே... என்று நினைப்போம்.. என்னாது உப்புமாவா என்று கேட்டு போர்க்குரல் உயர்த்துவார்கள் நம்ம வீட்டு ஆண்கள். 


அதுவும் சரிதான்.. உப்புமா சாப்பிட்டு போர் அடிக்கிறதா?... அப்போ உங்களுக்கு தான் இந்த கட்டுரை. அதற்கு மாற்றாக ரவா பொங்கல் செய்து பாருங்கள். சட்டென்று செய்யவும், மிகவும் ருசியாகவும் சாஃப்டாகவும், நல்ல ஃபில்லிங்கான உணவு இது.


ரவா பொங்கல் செய்ய கிச்சனுக்குள் போகலாம் வாங்க ஃபிரண்ட்ஸ் :


தேவையான பொருட்கள்:


1. வெள்ளை ரவை -  1  கப்.

2. பாசிப்பருப்பு - 1/2 கப். (எந்த கப்பில் அளக்க எடுக்கிறோமோ அதே கப்பில் எடுத்துக் கொள்ளவும்.)

3. சீரகம் &மிளகு   -தலா ஒரு ஸ்பூன்.

4. பச்சை மிளகாய் - 1

5. இஞ்சி துருவல் - 1/2 ஸ்பூன்.

6. நெய் அல்லது சமையல் எண்ணெய் - 3 ஸ்பூன்.

7. முந்திரி   - 10.

8. கருவேப்பிலை -  சிறிதளவு.

9. உப்பு - தேவைக்கு ஏற்ப.

10. பெருங்காயத்தூள்- 1/4 ஸ்பூன்.


செய்முறை:




1. பாசிப்பருப்பை சிறிது பெருங்காயத்தூள் ஒரு பின்ச் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.( பிறகு மசித்து கொள்ளவும் ). ஒரு பவுலில் மாற்றவும்.


2. ஒரு கடாயில் ரவை லேசாக அரை ஸ்பூன் நெய் விட்டு  வறுக்கவும். அதனை ஒரு பவுலில் மாற்றவும்.


3. அதே கடாயில் ரவை அளந்த கப்பில் 3 கப் தண்ணீர் ஊற்றவும். நன்றாக கொதி வரவேண்டும். தேவைக்கு உப்பு சேர்க்கவும். பச்சை மிளகாய் 1, சிறிது கருவேப்பிலை இஞ்சி துருவல் சேர்க்கவும்.


4. பிறகு வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக  கலக்கிக் கொண்டு சேர்க்க வேண்டும்.( ரவை கட்டி படாமல் கிளறவும்.)


5. ரவை நன்றாக வெந்த பிறகு வேகவைத்து ( கையில் தண்ணீர் தொட்டு பார்க்க கையில் ஒட்டாமல் வரவேண்டும் ),


6. மசித்து வைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக  கிளறவும். ஒரு மூடி போட்டு  மூடி வைக்கவும்.


7. தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி சீரகம், மிளகு,முந்திரி வறுத்து ரவைப் பொங்கலில் சேர்க்கவும். நன்றாக கிளறவும்.

 கம கம வென சூப்பரான டேஸ்டியான சாஃப்ட்டான ருசியான ரவா பொங்கல் ரெடி.


இதற்கு முருங்கைக்காய் சாம்பார்,கத்தரிக்காய் சாம்பார், போன்ற சாம்பார் வகைகள், தேங்காய் பொட்டுக்கடலை  சட்னியுடன் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.


ரவா பொங்கலில் உள்ள பாசிப்பருப்பு பிறகு நாம் சமைக்கும் சாம்பாரில் உள்ள பருப்பு நல்ல புரத சத்து அளிக்கும். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.


முக்கிய நன்மைகள்:




ரவா& பாசிப்பருப்பு  பொங்கல் வயிற்றுக்கு மிகவும் லேசானது.

குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் கூட எளிதில் சாப்பிடலாம். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.

உடல் வெப்பத்தை தணித்து, வாய்ப்புண்களை குணப்படுத்தும்.

உடல் எடை குறைக்க உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு எளிதில் ஜீரணம் ஆகி செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது.


சமைக்கும்போது கொஞ்சம் அன்போடு சமைத்து,பாசத்தோடு பரிமாறுங்க பாஸ்.


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்