அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

Oct 13, 2026,10:53 AM IST

கோபிச்செட்டிப்பாளையம் : தமிழக அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுக தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.  


"யானை தேய்ந்து கட்டெறும்பான அதிமுக" :


செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "அதிமுகவில் இருந்து என்னை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். ஆனால், தற்போது நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று பார்க்க வேண்டும். அதிமுகவின் நிலைமை யானை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறியுள்ளது" என்று விமர்சித்தார். மேலும், "அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளனர். இதற்காக நேற்றுகூட அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்" என்றும் அவர் பரபரப்பான தகவலைத் தெரிவித்தார்.   


விஜய் கருப்பு உடை அணிந்தாரா?




தவெக தலைவரும் முதல்வருமான விஜய், சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கருப்பு சட்டசை அணிந்ததாக வதந்திகள் பரவின. இது குறித்து பரவிய வதந்திகளுக்கும் அமைச்சர் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்தார். "வெள்ளிக்கிழமைகளில் மட்டும்தான் தவெக தலைவர் விஜய் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிவது வழக்கம்; மற்ற நாட்களில் இயல்பாக (Natural-ஆக) தான் இருப்பார்" என்று சுட்டிக்காட்டினார்.   மேலும், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே விஜய் கருநீல நிறத்தில் உடை அணிந்து வந்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், "பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருநீல உடை அணிந்தார் என்பதில் உண்மை இல்லை. அது முற்றிலும் தவறான தகவல்" என்று கூறி அத்தகைய தகவல்களை மறுத்துள்ளார்.   


தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் தாவப்போவதாகச் செங்கோட்டையன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே அதிமுக.,வில் இருந்து விலகி, தவெக.,வில் இணைந்தவர்களால் இடைத்தேர்தல்  2 தொகுதிகளில் நடந்துள்ளது. மேலும் 6 பேர் மீதான தகுதிநீக்க வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் தவெக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சமயத்தில் அமைச்சர் செங்கோட்டையன் இது போல் பேசி உள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொய்!

news

குடும்பம் என்பது ஒரு புத்தகம்.. சிறு பிழைகள் வரலாம்.. திருத்திக் கொண்டு படிக்க வேண்டும்!

news

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

news

Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்

news

திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!

news

6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

news

புதிய ஆளுநர்கள் நியமனம்: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநரானார் ராஜேந்திர அர்லேகர்

news

அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

news

ஆளுநர் பதவி தேவையில்லை என கூறிய திமுக, அவரது அதிகாரம் பற்றி பேசுவதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்