காலையிலேயே ஷாக்.. அதிரடியாக உயர்ந்த தங்கம் வெள்ளி விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Sep 13, 2024,12:02 PM IST

சென்னை:   இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரித்து  ரூ.54.600க்கும், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.120 அதிகரித்து  ரூ.6,825க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெருளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை பெரிய அளவில் ஏற்றமும் இன்றியும், இறக்கமும் இன்றியும் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. தங்கம் மட்டும் இன்றி வெள்ளி விலையும் உயர்ந்தே உள்ளது. வெள்ளி ஒரு கிராமிற்கு நேற்றைய விலையில் இருந்து ரூ.3.50சவரனுக்கு உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை...




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.120 அதிகரித்து ரூ.6,825 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,600 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.68,250 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,82,500க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,445 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,560 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.74,450 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,44,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,445க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.6,840க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,460க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,445க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,445க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,445க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,445க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,830க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை


நேற்று  ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.50 காசுகள் அதிகரித்து ரூ.91.50க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் கிராமிற்கு ரூ.3.50 காசுகள் உயர்ந்துள்ளன.


ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 95க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 760 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.950 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,500 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.95,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்