சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.56,000க்கும், ஒரு கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைந்தது. இதனால், தங்கம் விலை மத்திய பட்ஜெட்டின் போதே அதிரடியாக குறையத் தொடங்கியது. அதன்பின்னர் சவரனுக்கு ரூ.5000 வரை குறைந்தது தங்கம். இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் 3ம் தேதிக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை சிறுசிறுதாக உயரத்தொடங்கியது. இந்த விலையேற்றம் வாடிக்கையாளர்களிடைய ஒரு சுணக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னரும் நகை விலை உயர்ந்து தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் 56,000த்தை தொட்டுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறைந்ததை அடுத்து சர்வேதச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....
.jpg)
சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.20 அதிகரித்து ரூ.7000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,000 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.70,000 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,00,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,636 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,088 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.76,360 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,63,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,000க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,636க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,651க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,000க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,636க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,000க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,636க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,000க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,636க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,000க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,636க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,641க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், சென்னையில் நேற்று எந்த மாற்றமும் இருந்த வெள்ளி விலை இன்றும் அதே விலையிலேயே இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.98 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 784 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.980 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,800 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
{{comments.comment}}