தங்கம் விலை.. ம்ஹூம்.. மீண்டும் மீண்டும் உயர்வு.. இன்னிக்கு இதுதாங்க ரேட் பாத்துக்கங்க!

Oct 03, 2024,01:08 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன்  ரூ.56,880க்கும், ஒரு கிராமின் விலை  ரூ.7,110க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


நேற்றைய தங்கம் விலையை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.  பண்டிகை காலம் என்பதால் உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை சற்று கவலை அடையச் செய்துள்ளது. 


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 அதிகரித்து ரூ.7,110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி குறைந்திருந்த தங்கம், அக்டோபர் 1ம் தேதியும் குறைந்தே இருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 2ம் தேதி உயர்ந்திருந்த தங்கம் அக்டோபர் 3ம் தேதியும் உயர்ந்துள்ளது. 


நேற்று சவரனுக்கு ரூ.400ம், இன்று சவரனுக்கு ரூ.80 ஆகி உயர்ந்துள்ளது தங்கம். இந்த விலையேற்றம் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி உயர்ந்துள்ளது. நகை  பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இனி வரும் காலங்களில் நகை விலை உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,880 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,100 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,11,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,756 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,048 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77,560 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,75,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,756க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,125க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,771க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,756க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,756க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,756க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,756க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,761க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த 3 நாட்களாக வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரே விலையிலேயே இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,010 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!

news

"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்