விடாமுயற்சி.. ஷூட்டிங் பற்றி ஹாட் அப்டேட் கொடுத்த ஷாலினி

Sep 13, 2023,10:29 AM IST
சென்னை : அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி ஷூட்டிங் எப்போது துவங்க உள்ளது என்பத தொடர்பான ஹாட் அப்டேட்டை ஒன்றை நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு அஜித் ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

வலிமை படத்திற்கு பிறகு லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும், இதற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் வலிமை பட ரிலீசிற்கு முன்பே லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு விட்டது. ஆனால் வலிமை படம் ரிலீசாகி பல மாதங்கள் ஆகிய விட்டது. இதுவரை விடாமுயற்சி பட டைட்டிலை வெளியிட்டதோடு சரி வேறு எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் செம கடுப்பாகி விட்டனர்.



அஜித்தும் வெளிநாடு பைக் டூர் சென்று விட்டு, சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். லைகா நிறுவனமும் சந்திரமுகி 2 ரிலீசில் பிஸியாக உள்ளது. இதனால் விடாமுயற்சி ஷூட்டிங்கை எப்போது தான் துவக்க போகிறார்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். இந்நிலையில் இந்த படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்றை ஷாலினி வெளியிட்டுள்ளார்.

அதாவது, அஜித்தின் அடுத்த படமான டைரக்டர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாக ஒரு போஸ்டரை பகிர்ந்து, அதோடு அடுத்த வாரம் முதல் என குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டரில் நீண்ட வெள்ளை தாடியுடன், கூலிங் கிளாஸ் போட்டு இருக்கும் அஜித்தின் தலை மட்டும் ஒரு டேபிள் மீது உள்ளது. அந்த தலைக்கு நேராக ஃபோக்கஸ் லைட்...அதற்கு பின்னால் முகமுடி அணிந்த நபர் என அந்த போஸ்டர் உள்ளது.

இதனால் வலிமை படத்தை போல் இதுவும் ஒரு கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்த படமா? அஜித் இந்த படத்தில் கேங்ஸ்டராக நடிக்கிறாரா? என ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அது மட்டுமல்ல, பல மாதங்களாக அடுத்த வாரம் அடுத்த வாரம் என்று சொல்லிக் கொண்டு தான் இருக்கீங்க. அப்டேட் எதையும் காணோம். இந்த முறையாவது நம்பலாமா? என பலர் சந்தேகத்துடன் கேட்டுள்ளனர்.

ஏற்கனவே ஜெயிலர், ஜவான் வசூல் வேட்டை, லியோ பட ரிலீஸ், தலைவர் 171 ஷூட்டிங் என தமிழ் சினிமாவில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கையில் தற்போது புதிய பரபரப்பாக விடாமுயற்சி ஷூட்டிங்கும் அதில் சேர்ந்துள்ளது. ஷாலினி சொல்லிட்டாரு, ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைகாவோ, டைரக்டரோ இதுவரை எதுவும் சொல்லவில்லையே என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்