சென்னை: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் ஆனதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் முதல் ஆளாக குரல் கொடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் தான் ஜனநாயகன். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த பொங்கள் பண்டிகையையின் போது இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்சார் கிடைக்காததால் இப்படம் இன்று வரை வெளியாகமால் உள்ளது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், மே 2ம் வாரத்தில் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருந்தன.

இந்நிலையில், விஜய்யின் அறிமுக காட்சி மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. சுமார் 5 நிமிட காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம். இரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது. தயவு செய்து திருட்டுத்தனத்தை தவிருங்கள். திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருந்து. அங்கே சென்று பாருங்கள். இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை உடுக்கப்பட வேண்டும். திறமையாளர்களை மதியுங்கள்... கடின உழைப்பை மதியுங்கள்... சினிமா துறையை மதியுங்கள் என்று கூறியுள்ளார்.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}